அதிமுக கூட்டணி வேட்பாளர்களில் 7 கிறிஸ்தவர்கள், 6 முஸ்லீம் வேட்பாளர்கள்!
சென்னை: திமுக கூட்டணியில், கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டும் 10 இடங்களை திமுக ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து 6 முஸ்லீம்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதே போல 7 கிறிஸ்துவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இரண்டு பெரிய முஸ்லீம் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகிய அந்த இரண்டு கட்சிகளுக்கும் தலா 5 தொகுதிகளை திமுக அளித்துள்ளது.
இதுபோக திமுக வேட்பாளர்களிலும் முஸ்லீம்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். எனவே திமுக கூட்டணியில் முஸ்லீம் சமுதாய பிரதிநிதித்துவம் நிச்சயம் 10க்கு மேல் போய் விடும். ஆனால அதிமுக அதில் பின்தங்கியே உள்ளது.

அதிமுக சார்பில் 4 பேர்
அதிமுக சார்பில் நான்கு முஸ்லீம் வேட்பாளர்களுக்கே வாய்ப்பு கிடைத்துள்ளது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, வாணியம்பாடி, நத்தம், பாளையங்கோட்டை ஆகிய தொகுதிகளில் அதிமுக சார்பில் முஸ்லீம் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

2 பெண் - 2 ஆண்
இதில் சேப்பாக்கம் தொகுதியில் நூர்ஜஹான், வாணியம்பாடியில் டாக்டர் நீலோபர் என இரு பெண்களும், நத்தம், பாளையங்கோட்டையில் ஆண்களும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு 2 இடம்
இவர்கள் தவிர தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு 2 இடங்களைக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா. எனவே இவர்களையும் சேர்த்தால் அதிமுக கூட்டணியில் 6 முஸ்லீம் வேட்பாளர்கள் வருகிறார்கள்.

கிறிஸ்தவர்கள் 7 பேர்
கிறிஸ்தவ வேட்பாளர்கள் எண்ணிக்கையைப் பார்த்தால் அது 7 பேர் வருகிறது. மதுரவாயல்: பா.பென்ஜமின், அம்பத்தூர்: ஏ. அலெக்சாண்டர், மானாமதுரை (தனி) : மாரியப்பன் கென்னடி, ராதாபுரம்: லாரன்ஸ், நாகர்கோவில் டாரதி சேம்சன், விளவங்கோடு நாஞ்சில் டொமினிக் (எ) டொமினிக் சாவியோ ஜார்ஜ், கிள்ளியூர் மேரி கமலா பாய் ஆகியோரே அவரகள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications