கடந்த முறை ஜெ. சவப்பெட்டி... இந்த முறை ஜூஸ் குடிக்கும் வீடியோ... அதகளப்படும் ஆர்கே நகர்!

கடந்த முறை ஜெயலலிதாவின் சவப்பெட்டி, இந்த முறை ஜூஸ் குடிக்கும் வீடியோ என ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்காக ஸ்டென்ட் அடிக்கப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திகில் கிளப்பும் எம்எல்ஏ வெற்றிவேல்- வீடியோ

    சென்னை: ஆர்கே நகருக்கு கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அவரது சவப்பெட்டி மாதிரியும், இந்த முறை ஜூஸ் குடிக்கும் வீடியோவும் தற்போது அதகளப்படுத்தப்படுகின்றன.

    சென்னை மெட்ரோ ரயில் தொடக்க விழாவுக்கு பின்னர் காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைவு போன்ற உடல்நல பாதிப்புகளால் கடந்த ஆண்டு செப்.22-ஆம் தேதி ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்.

    இதை அறிந்த பொதுமக்களும், தொண்டர்களும் அப்பல்லோ வாசலில் குவிந்தனர். எனினும் ஜெயலலிதாவுக்கு ஒன்றும் இல்லை என்ற அறிக்கைகளே வெளியாகிவந்தன.

    எந்த ஆதாரமும் இல்லை

    எந்த ஆதாரமும் இல்லை

    எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது அவரது புகைப்படம் வெளியானது. அதுபோன்று ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது வீடியோ, புகைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுபோன்று ஒன்று வெளியாகவில்லை.

    மரணத்தில் மர்மம்

    மரணத்தில் மர்மம்

    இந்நிலையில் ஜெயலலிதா தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு, அது பலனிக்காமல் மரணமடைந்துவிட்டார். இதைத் தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது. ஆர்கே நகருக்கு கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடத்த அறிவிக்கப்பட்டது. அப்போது எடப்பாடி அணி சார்பில் தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிட்டனர்.

    தேர்தலில் சவப்பெட்டி

    தேர்தலில் சவப்பெட்டி


    இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதால் நீதி விசாரணை கோரி ஓபிஎஸ் அணியினர் வலியுறுத்தி வந்தனர். அந்த நேரத்தில் இடைத்தேர்தலில்
    மெழுகால் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சவப்பெட்டி மாதிரியை கொண்டு ஓபிஎஸ் அணியினர் வாக்கு சேகரித்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு நிலவியது.

    மீண்டும் தேர்தல்

    மீண்டும் தேர்தல்

    இந்நிலையில் பணப்பட்டுவாடா தொடர்பாக இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பிரிந்திருந்த இரு அணிகளும் ஒன்றிணைந்துவிட்டன. ஆனால் தினகரன் தனது ஆதரவாளர்களுடன் தனித்தே செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஆர்கே நகருக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக சார்பில் மதுசூதனனும், தினகரன் அணி சார்பில் தினகரனும் போட்டியிடுகின்றனர்.

    ஜெயலலிதா சிகிச்சை வீடியோ

    ஜெயலலிதா சிகிச்சை வீடியோ

    ஜெயலலிதா மரணத்தில் சசிகலா குடும்பத்திற்கு பெரும் பங்கு உள்ளது என்ற குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில் டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல், அப்பல்லோவில் ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

    ஆர்கே நகருக்காக

    ஆர்கே நகருக்காக

    ஆர்கே நகர் இடைத்தேர்தல் என்பது அதிமுக, தினகரன் அணியினருக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று இதுபோல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது தினகரன் அணியின் அரசியல் ஸ்டென்ட்டாகவே பார்க்கப்படுகிறது. கடந்த முறை சவப்பெட்டி, இந்த முறை சிகிச்சை வீடியோ என ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தி இவர்கள் மக்களின் அனுதாபத்தை பெற முயற்சிக்கின்றனர் என்பது அப்பட்டமான உண்மை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+