24+2+14= 40.. என்னா ஒரு சிந்தனை... !!!
சென்னை: அதிமுகவினரைப் பார்த்து யாரும் இனிமேல் எந்த தப்பான விமர்சனமும் செய்ய முடியாது.. யாருக்குமே எட்டாத அப்படி ஒரு அபாரமான சிந்தனைத் திறனை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதியை வைத்து ஒரு அபாரமான கணக்கை போட்டு பிரமிக்க வைத்துள்ளனர்.
24.2.2014... இதை வைத்துத்தான் இந்தக் கணக்கைக் கண்டுபிடித்து டைம்லியாக கலக்கியுள்ளனர் அதிமுகவினர்.

ஜெயலலிதா பிறந்த நாள்
முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பிப்ரவரி 24ம் தேதி வருகிறது. இதை பிரமாண்டமாக, பிரமாதமாகக் கொண்டாட அதிமுகவினர் ஆயத்தமாகி வருகின்றனர்.

பால் காவடி.. தீ மிதி..
பால் காவடி, தீமிதி, தங்கத் தேர் இழுத்தல், அன்னதானம் உள்பட பல விதமான தான தர்மங்களிலும், வேண்டுதல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

அனைவரையும் தூக்கி சாப்பிட்ட செ.பா.
ஆனால் போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரமாண்டமான கட்டாய ரத்ததான முகாமை நடத்தி அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டார்.

ஆனால் இந்தக் கணக்கு இருக்கே.... அபாரம்
ஆனால் யாருமே யோசிக்க முடியாத அளவுக்கு படு பிரில்லியன்ட்டாக யோசித்து ஒரு சின்னக் கணக்கைப் போட்டு பேனர் மூலம் சென்னை அதிமுகவினர் அசத்தியுள்ளனர்.

24+2+14= 40.
அதாவது ஜெயலலிதாவின் பிறந்த தேதி, மாதம், வருடத்தை வைத்து கூட்டுத் தொகை 40 என்று வருவதை சுட்டிக் காட்டி, வருகிற லோக்சபா தேர்தலிலும் அதிமுக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் வெல்லப் போவதை சிம்பாலிக்காக விளக்கி.. சிலிர்க்க வைத்துள்ளனர்.
என்னா ஒரு சிந்தனை.. ரூம் போட்டு யோசிச்சா கூட நமக்கெல்லாம் இப்படியாப்பட்ட சிந்தனை வராதேய்யா....
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications