பசும்பொன்னில் அதிமுக பேனர்கள் கிழிப்பு.. டிடிவி தினகரன் உள்பட 100 பேர் மீது வழக்கு
பசும்பொன்னில் தேவர் ஜெயந்தியின் போது வைக்கப்பட்டு இருந்த அதிமுக பேனர்களை கிழித்ததாக டிடிவி தினகரன் உட்பட 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
Recommended Video

ராமநாதபுரம்: பசும்பொன்னில் தேவர் ஜெயந்தியின் போது வைக்கப்பட்டு இருந்த அதிமுக பேனர்களை கிழித்ததாக டிடிவி தினகரன் உட்பட 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
கடந்த அக்டோபர் 30ம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 111வது ஜெயந்தி விழா மற்றும் 56வது குருபூஜை விழா கொண்டாடப்பட்டது. பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் இதற்காக விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் அங்குள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிலையில் டிடிவி தினகரன் அங்கு வந்து மாலை அணிவித்துவிட்டு சென்றபின் அங்கிருந்த அதிமுக பேனர்கள் அனைத்தும் கிழிக்கப்பட்டு இருக்கிறது. சில மர்ம நபர்கள் அங்கிருந்த அதிமுக பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்களை கிழித்து இருக்கிறார்கள்.
இதற்கு காரணம் டிடிவி தினகரன்தான் என்று அதிமுகவினர் ஏற்கனேவே குற்றச்சாட்டு வைத்து வந்தனர். அவரின் தூண்டுதலின் பேரில் அமமுகவினர் இப்படி செய்துள்ளனர் என்று கூறினார்கள்.
இந்த நிலையில் பசும்பொன்னில் அதிமுக பேனர்கள் கிழிப்பு தொடர்பாக டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் உள்பட 100பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவினரின் புகாரை அடுத்து கமுதி போலீசார் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அதோடு இந்த வழக்கு தொடர்பாக அமமுக கமுதி வடக்கு ஒன்றிய துணைச்செயலாளர் மாரிமுத்து உள்பட 6 பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications