திருச்சியில் சசிகலா உருவபொம்மை எரிப்பு - வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் ஆர்பாட்டம்

துவரங்குறிச்சியில் சசிகலாவின் உருவபொம்மையை எரித்து வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: அதிமுகவிலிருந்து வைத்திலிங்கத்தை நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்து திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் சசிகலாவின் உருவபொம்மையை எரித்து வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைந்துள்ளன. அணிகள் இணைந்த உடனே செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம் எம்.பி, அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

ADMK Cadres burns Sasikala's effigy

இதற்கு எடப்பாடி அணியில் உள்ள சில எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே அதிமுக அம்மா அணியிலிருந்து வைத்திலிங்கம் எம்பியை நீக்கியதாக டிடிவி தினகரன் அறிவித்தார். இதனால் கொந்தளித்த வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் தஞ்சாவூரில் தினகரன் உருவபொம்மையை எரிக்க முயன்றனர்.

இதனைத் தினகரன் ஆதரவாளர்கள் தடுக்க முயன்றனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியது. தஞ்சாவூரில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் சசிகலாவின் உருவபொம்மையை எரித்து வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுகவிலிருந்து வைத்திலிங்கத்தை நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+