தினகரனே திரும்பி போ! திரும்பி போ! கறுப்புக் கொடியுடன் குவிந்த அதிமுகவினரால் சென்னையில் பரபரப்பு
சென்னை அருகே திருநின்றவூரில் டி.டி.வி. தினகரனுக்கு அதிமுகவினரே கறுப்பு கொடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: சென்னை அருகே திருநின்றவூரில் எம்ஜிஆர்- ஜெயலலிதா சிலைகளை திறக்க சென்ற அதிமுக துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரனுக்கு எதிராக அக்கட்சியினரே கறுப்பு கொடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சசிகலா சிறைக்குப் போன நிலையில அதிமுகவின் துணைப் பொதுச்செயலரானவர் தினகரன். தற்போது அதிமுகவையும் ஆட்சியையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.

சசிகலாவையே ஏற்க மறுக்கும் அதிமுக தொண்டர்கள் தினகரனின் நாடகங்களால் கடும் அதிருப்தி அடைந்து போயுள்ளனர். தினகரனும் தமது இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக அதிமுக தலைமை அலுவலகம் போவது, செய்தியாளர்களை சந்திப்பது, மைக் பிடிப்பது என சகல வித்தைகளையும் செய்து வருகிறார்.
சென்னை அருகே திருநின்றவூரில் நேற்று எம்ஜிஆர்-ஜெயலலிதா சிலைகளைத் திறந்து வைக்க தினகரன் சென்றார். அப்போது தினகரனே திரும்பி போ! தினகரனே திரும்பி போ! என்ற முழக்கங்களுடன் கறுப்புக் கொடி ஏந்தி அதிமுகவினர் முழக்கங்களை எழுப்ப பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் தினகரன் கடும் அதிர்ச்சியடைந்தார். பின்னர் கறுப்பு கொடி காட்டியவர்களை போலீசார் அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications