சொல்லாததையும் செய்த திமுக... அதிமுகவின் லொள்ளுத்தனமான பதிலடி!
சென்னை: நாங்கள் சொல்வதைச் செய்வோம்... சொல்லாததையும் செய்வோம் இது திமுகவின் பஞ்ச். இதற்கு குறும்பட பாணியில் நக்கல் அடித்து விளம்பரம் செய்கிறது அதிமுக.
அதிமுகவிற்கு எதிராக கடந்த சில நாட்களாக 'சொன்னீங்களே? செஞ்சீங்களா?' என்று கேட்டு டிவிக்களில் விளம்பரம் செய்யது திமுக. இதற்கு தேர்தல் ஆணையம் வரை சென்றது அதிமுக. தற்போது இதற்கு பதிலடி தரும் வகையில் அதிமுகவும் விளம்பரம் செய்து வருகிறது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று சாதனைகளை பட்டியலிட்டு விளம்பரம் செய்த அதிமுக தற்போது சொல்லாததையும் செய்த திமுக என்று கூறி குறும்பட பாணியில் விளம்பரம் செய்கிறது.
திமுக தற்போது எதிர்ப்பு பிரச்சாரத்தை கைவிட்டு விட்டு தேர்தல் அறிக்கையை சொல்லி வாக்கு சேகரிக்கத் தொடங்கி விட்டது. இதுநாள் வரை சாதனைகளை மட்டுமே விளம்பரம் செய்து வந்த அதிமுகவோ, திமுக எதிர்ப்பு விளம்பரத்தை தொடங்கிவிட்டது. இதுதான் இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications
