சேலம் மறுவாக்குப்பதிவு: வாக்குச்சாவடியில் அடாவடியாய் நுழைந்த அதிமுக வேட்பாளர்
சேலம்: மறுவாக்குப்பதிவு நடைபெற்ற சேலம் தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் கட்சிக் கரை வேஷ்டி துண்டுடன் அதிமுக வேட்பாளர் நுழைந்து அடாவடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இயந்திர கோளாறால் பழுதான சேலம் தொகுதியின் 213வது பூத்துக்கு மறுவாக்குபதிவு சனிக்கிழமை நடைபெற்றது. பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோயில் மாநாகராட்சி பள்ளியில் மக்கள் வாக்களிக்க வந்தனர்.
அங்கு பார்வையிட வந்தார் அ.தி.மு.க வேட்பாளர் பன்னீர்செல்வம். அவருடன் எம்.எல்.ஏ., எம்.கே.செல்வராஜ் உட்பட்ட பட்டாளம் வர, அவர்களை பள்ளி வாசலிலேயே காவல்துறை தடுத்து நிறுத்தியது.

அப்போது ‘யாரை தடுத்து நிறுத்துற?’என எகிறினர் அ.தி.மு.க.வினர்.
'வேட்பாளர் மட்டும் போகலாம்... மற்றவர்களுக்கு அனுமதியில்லை. எம்.எல்.ஏ வாக இருப்பவருக்கு அனுமதியில்லை' என காவல்துறை டி.சி பாபு கூறினார். எனவே எம்.எல்.ஏ வை தடுத்தனர் மத்திய ரிசர்வ் படையினர்.

மிரட்டிய வேட்பாளர்
உடனே திரும்பிய வேட்பாளர் பன்னீர்செல்வம் ‘நான் சொல்லியும் இன்னும் விடலையா? எம்.எல்.ஏவையே விட மறுக்குறீர்களா? ஜெயிச்சதும் பார்த்துக்குறேன்' என விரல் நீட்டி பேசிவிட்டு அங்கிருந்து கடுப்பாகவே உள்ளே வந்தார்.

திமுக வேட்பாளருடன் மோதல்
அ.தி.மு.க. கட்சி துண்டு, வேட்டி போட்டு வர ‘இது தேர்தல் விதிப்படி தவறு' என அங்கிருந்த தி.மு.க வேட்பாளர் உமாராணி செல்வராஜ் கூற, 'நீ என்ன வேணா சொல்லிக்கோ அப்படிதான் வருவேன்' என்றபடி வாக்குபதிவு நடக்கும் பூத் அறைக்கு நுழைந்தார்.

கட்சி கரை துண்டு
அவரை அதிகாரிகள் ‘சார் கட்சி துண்டோடு போகக்கூடாது' என கூக்குரலிட, திரும்பிய பன்னீர்செல்வம் ‘என்னைய தடுக்க முடியாது' என்று சொல்லிவிட்டு நுழைந்தார். அதன்பின் உள்ளே சென்ற ஒரு அதிகாரி ‘சார் பத்திரிக்கையாளர்கள் இருக்காங்க ப்ளீஸ் ஒத்துழைப்பு தாங்க' என கெஞ்சி வெளியே கூட்டி வந்தார்.

உனக்குத்தான் ஓட்டு போட்டேன்
பன்னீர்செல்வம் நுழையும்போதே அங்கேயிருந்த ஒரு முதிய பெண்மணி ‘உனக்கு தான்யா வோட்டு போட்டேன்' என வேட்பாளர் காலை தொட செல்ல ‘இங்கெல்லாம் இப்படி பண்ணி வம்புல சிக்க விட்றாதம்மா' என்றபடியே நழுவினார் பன்னீர்செல்வம்.

திமுக வேட்பாளர் முறையீடு
அங்கு வந்த தலைமை தேர்தல் அதிகாரி அஜய் யாதவிடம், அனைத்தையும் முறையிட்டார் தி.மு.க வேட்பாளர் உமாராணி. அவர் சட்டை செய்யவில்லை. ‘வேட்பாளர் கரைவேட்டி, துண்டோடு வருகிறார். இது தவறு ஆனால் நீங்கள் தடுக்க மறுக்குறீர்? அப்படியென்றால் நானும் இங்கேயே உதயசூரியன் சின்னத்தை கைகளால் காட்டவா?' என கோபமாக விரல்களை விரித்து காட்டினார்.

உமாராணி குற்றச்சாட்டு
அ.தி.மு.க வேட்பாளர் பன்னீர்செல்வம் அத்துமீறுகிறார். தேர்தல் விதிகளை கடைபிடிக்கவில்லை என்றார் தி.மு.க வேட்பாளர் உமாராணி. மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி முன்பாக அதிமுக, திமுக வேட்பாளர்களின் சலசலப்பு காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications