ஸ்ரீரங்கம்.. மீண்டும் மனுத் தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் வளர்மதி!
Subscribe to Oneindia Tamil
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ். வளர்மதியும், அதிமுக மாற்று வேட்பாளரும் இன்று 2வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் எஸ். வளர்மதி போட்டியிடுகிறார். மாற்று வேட்பாளராக கோவிந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார். இருவரும் ஏற்கனவே மனுத் தாக்கல் செய்து விட்டனர்.

இந்த நிலையில் இன்று இருவரும் மீண்டும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். முதலில் தாக்கல் செய்த மனுவில் குறைபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்தே இருவரும் மீண்டும் மனுத் தாக்கல் செய்ததாக பேச்சு அடிபடுகிறது.
அதேசமயம், இன்று தை அமாவாசை என்பதால் மீண்டும் அவர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்ததாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.












Click it and Unblock the Notifications