அமாவாசை போய்ருச்சு..'அம்மா'விடமிருந்து தப்பிச்சுட்டோம்.. அதிமுக வேட்பாளர்கள் நிம்மதி!
சென்னை: அதிமுக வேட்பாளர்கள் மாற்றம் நிகழும் என வதந்தி கிளம்பிய அமாவாசை தினத்தில் அது போன்ற எந்த சம்பவமும் நடைபெறாததால் அக்கட்சி வேட்பாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
அதிமுகவில் அமாவாசை தினத்தன்று பல முக்கிய முடிவுகளை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா எடுத்து வருவதாக கூறப்படுகின்றது.

காரணம், அமாவாசை தினம் ஜோதிட ரீதியாக நல்ல நாள் என்று கூறப்படுகின்றது. அன்றைய தினம் துவங்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் வெற்றியை கொடுக்கும் என்பது ஜோதிடர்கள் பலரின் நம்பிக்கை.
தமிழகத்தில் அதிமுக அரசு பொறுப்பு ஏற்றது முதல் அமாவாசை தினம் அன்று பல நல்ல நிகழ்ச்சிகள் துவக்க விழாவும், சில தருணங்களில் அமைச்சரவை மாற்றமும் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் அமாவாசை என்பதால், அன்றைய தினம் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் சிலர் மாற்றப்படலாம் என அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக உள்ள சிலர் அரசியல் திரியை கொழுத்திப் போட்டனர். இந்த தகவல் காட்டுத் தீ போல நாலா திசை எங்கும் பரவ, அதிமுக வேட்பாளர்கள் சிலர் கடும் கலக்கம் அடைந்தனர். ஒருவருக்கு ஒருவர் மிக ரகசியமாக போன் போட்டு விசாரித்துக் கொண்டனர்.
ஆனால் எதிர்பார்த்தபடி அமாவாசை தினமான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று வேட்பாளர்கள் மனம் வருந்துமாறு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் உற்சாகமான வேட்பாளர்கள் சிலர், அப்பாடா.. பாதி கண்டத்தை தாண்டிவிட்டோம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
மீதி கண்டனம் என்ன வென்று விசாரித்தால் அது தாங்க, வேட்புமனு கடைசி தினமான ஏப்ரல் 5ம் தேதி தான் என்று தெரிவித்தனர். கராணம் அன்று தான் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தினமாம்.
அரசியல் இது எல்லாம் சகஜம்பா என ஒரு கும்பல் பலரையும் சுற்றலில் விட்டபடியே உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications