மாநகராட்சிகளில் அதிமுக வென்றால் இவர்களுக்குதான் மேயர் வாய்ப்பு!
சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தல் களை கட்டியுள்ளது. அதிமுக வேட்பாளர்கள் இன்று ஒரே நேரத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்து அசத்தினர்.
இதனிடையே மாநகராட்சிகளில் அதிமுக வென்றால் யார் யாருக்கு மேயராகும் வாய்ப்பு கிடைக்கும் என பட்டிமன்றத்தையும் அதிமுக தொண்டர்கள் நடத்தி வருகின்றனர்.
சென்னையைப் பொறுத்தவரையில் ஜேசிடிபிரபாகரன் மற்றும் நா. பாலகங்கா ஆகிய இருவரில் ஒருவருக்கு மேயர் பதவி கிடைக்குமாம்.. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் எஞ்சிய 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்களில் ஒருவருக்கு துணைமேயர் பதவிக்கு வாய்ப்புள்ளதாம்.

சேலம் சவுண்டப்பன்
வேலூரில் 60-வது வார்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஜெ.அமலநிருபாவுக்கும் சேலத்தில் தற்போதைய மேயர் சவுண்டப்பனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம்.

சேலம் உமாராஜூ
தேமுதிகவில் இருந்து அதிமுகவுக்கு வந்த சேலம் உமாராஜுக்கு 40-வது வார்டில் போட்டியிடுகிறார். அவரும் மேயர் கனவில் இருக்கிறாராம்.

திருப்பூரில் மாஜி அமைச்சர்
ஈரோட்டில் தற்போதைய துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, மண்டல தலைவர் மா.கேசவ மூர்த்தி ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. திருப்பூரில் முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு நிச்சயம் மேயராகும் வாய்ப்பு கிடைக்குமாம்.

திருச்சியில் மல்லுக்கட்டு
கோவையில் சீனியரான தாமரைச் செல்வியைவிட எஸ்.ஷர்மிளா, திருச்சியில் சிட்டிங் மேயர் ஜெயா அல்லது தமாகாவில் இருந்து வந்த முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் ஆகியோரது பெயர்கள் மேயர் பதவிக்கு அடிபடுகின்றன.

மதுரையில்...
தஞ்சையில் தற்போதைய மேயர் சாவித்திரி கோபால், ஏ.ஜி.தங்கப்பன், அறிவுடை நம்பி ஆகியோர் ரேசில் உள்ளனர். மதுரையில் கே.சண்முகவல்லி, கண்ணகி பாஸ்கரன், திண்டுக்கல்லில் தற்போதைய மேயர் மருதராஜின் மகள் எம்.பொன்முத்து ஆகியோர் மேயர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

விஜிலா சகோதரி
நெல்லையில் அதிமுக மகளிர் அணி செயலாளரும், எம்பியுமான விஜிலா சத்தியானந்தின் சகோதரி வெண்ணிலா ஜீவபாரதிக்குதான் மேயராகும் வாய்ப்பிருக்கிறதாம்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications