For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்மாவட்டத்தில் 25-ல் அதிமுக- 19; திமுக- 6 தொகுதிகளில் வெல்லும்- தந்தி டிவி கருத்து கணிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தென் தமிழகத்தில் ஆளும் அதிமுகவுக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி தொலைக்காட்சியில் மக்கள் யார் பக்கம் என்ற தலைப்பில் தொடர்ந்து கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் தென் தமிழகத்தில் அதிமுகவுக்கே அமோக ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவியின் கருத்து கணிப்பு விவரம்

ஆலங்குளம்

ஆலங்குளம்

ஆலங்குளம் தொகுதியில் அதிமுக 42%; திமுக 44%; தேமுதிக 9%; பாஜக 1% வாக்குகள் கிடைக்கும்.

அம்பாசமுத்திரம்

அம்பாசமுத்திரம்

அதிமுக 45%; திமுக 40%; மநகூ- 9%; பாஜக- 2% கிடைக்கும்.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை

அதிமுக 43%; திமுக 42%; இ.கம்யூ- 6%; பாஜக 3% வாக்குகள் கிடைக்கும்.

கடையநல்லூர்

கடையநல்லூர்

தமிழக முஸ்லிம் லீக் (அதிமுக அணி) 38%; திமுக 49%; தேமுதிக 5%; பாஜக-3% வாக்குகள் கிடைக்குமாம். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் தமிழக முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

அதிமுக 48%; திமுக 36%; பாஜக-9%; மநகூ- 7% வாக்குகள் கிடைக்கும் என்கிறது இக்கருத்து கணிப்பு.

கோவில்பட்டி

கோவில்பட்டி

அதிமுக 36%; திமுக -30%; மதிமுக -26%; பாஜக-3% என வாக்குகள் கிடைக்குமா. இந்த தொகுதியில்தான் மதிமுக பொதுச்செயலர் வைகோ போட்டியிடுவதாக அறிவித்து பின்னர் விலகியிருந்தார்.

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர்

அதிமுக 43%; காங்கிரஸ் 39%; மதிமுக 12%; பாஜக, நாம் தமிழர் உட்பட பிற கட்சிகள் 5% வாக்குகளைப் பெறும்.

நாங்குநேரி

நாங்குநேரி

அதிமுக 45%; திமுக 40%; மநகூ- 9%; பாஜக-2% வாக்குள் கிடைக்குமாம்.

நெல்லை

நெல்லை

அதிமுக 50%; திமுக 40%; தேமுதிக 6%; பாஜக-1% வாக்குகள் பெறும் என்கிறது தந்தி கருத்து கணிப்பு.

பாளையங்கோட்டை

பாளையங்கோட்டை

அதிமுக 40%; திமுக-43%; மநகூ-7%; பாஜக 3% வாக்குகளைப் பெறும். இத்தொகுதி திமுக வேட்பாளர் மைதீன்கானுக்கு சொந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்புதெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பரமக்குடி

பரமக்குடி

அதிமுக 37%; திமுக 37%; விடுதலை சிறுத்தைகள் 15%; பிற கட்சிகள் 10% வாக்குகளைப் பெறும். இத்தொகுதியில்தான் அதிமுக ஆட்சிக் காலத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 7 தலித்துகள் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

அதிமுக 41%; மனிதநேய மக்கள் கட்சி 38%'; தேமுதிக 13% பிற கட்சிகல் 7% வாக்குகளைப் பெறும்.

ராதாபுரம்

ராதாபுரம்

அதிமுக 37%; திமுக 41%; பாஜக 6%; மநகூ- 8% வாக்குகளைப் பெறும். இத்தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அப்பாவு, 3 முறை இதேதொகுதியில் தமாகா, சுயேட்சை, திமுக சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏவாக இருந்தவர்.

சங்கரன்கோவில் (தனி)

சங்கரன்கோவில் (தனி)

அதிமுக 50%; திமுக 27%; மதிமுக 20% பாஜக 1% வாக்குகளைப் பெறும்.

சாத்தூர்

சாத்தூர்

அதிமுக 44%; திமுக 38%; மதிமுக 13% பாஜக 3% வாக்குகள் கிடைக்குமாம்.

சிவகாசி

சிவகாசி

அதிமுக 48%; காங்கிரஸ் 38%; தேமுதிக 9%; பாஜக 3% வாக்குகள் பெறும் என்கிறது இக்கருத்து கணிப்பு.

ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டம்

அதிமுக 48%; திமுக 35%; தமாகா 8%; பாஜக 3% வாக்குகள் கிடைக்குமாம்.

ஸ்ரீவில்லிப்புத்தூர்

ஸ்ரீவில்லிப்புத்தூர்

அதிமுக 46%; புதிய தமிழகம் 36%; இ.கம்யூ 13% பாஜக 3% வாக்குகள் பெறும்.

தென்காசி

தென்காசி

அதிமுக 45%; திமுக 41% தமாகா 8% பாஜக 5% வாக்குகள் கிடைக்கும்.

திருச்சுழி

திருச்சுழி

திமுக 46%; அதிமுக 39% தேமுதிக 10%; பாஜக 3% வாக்குகள் பெறும்.

திருவாடானை

திருவாடானை

திமுக 40%; அதிமுக 39%; தேமுதிக 14%; பிற கட்சிகள் 6% வாக்குகள் பெறும். அதிமுக சார்பில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரான நடிகர் கருணாஸ் இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி

அதிமுக 44%; திமுக 40%; மதிமுக 11% வாக்குகளைப் பெறும் என்கிறது தந்தி கணிப்பு.

வாசுதேவநல்லூர்(தனி)

வாசுதேவநல்லூர்(தனி)

அதிமுக 48%; புதிய தமிழகம் 41%; இ.கம்யூ 6% வாக்குகளைப் பெறுமாம்.

விளாத்திகுளம்

விளாத்திகுளம்

அதிமுக 46%; திமுக 36%; தமாகா 10%; பாஜக 2% வாக்குகள் கிடைக்குமாம்.

விருதுநகர்

விருதுநகர்

அதிமுக 43%; திமுக 30%; தேமுதிக 17%; பாஜக 5% வாக்குகள் பெறும் என்கிறது இக்கணிப்பு.

English summary
According to Thanthi TV Survey, ADMK will capture majority southern TN seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X