டிசம்பர் 21ம் தேதி அதிமுக கிறிஸ்துமஸ்... ஜெ.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா சார்பில் கிறிஸ்துமஸ் விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா நாளை (21-ந் தேதி) மாலை 4 மணிக்கு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கன்வென்ஷன் ஹாலில் நடைபெறுகிறது.
விழாவில் திருநெல்வேலி மறை மாவட்ட பேராயர் ஜெ.ஜெ. கிறிஸ்துதாஸ் துவக்க ஜெபம் செய்கிறார். அமைப்பு செயலாளர் பி.எச். பாண்டியன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பேராயர் எம்.பிரகாஷ் வேதாகமம் வாசிக்கிறார்.
விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக்கை பகிர்ந்து கொடுத்து வாழ்த்துரை வழங்குகிறார்.
நிகழ்ச்சியில் சென்னை - மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் ஆண்டனி சாமி, தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயர் வே.தேவசகாயம் ஆகியோர் கிறிஸ்துமஸ் நற்செய்தி வழங்குகிறார்கள்.
விழாவில் அனைத்து அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பி.எச்.மனோஷ் பாண்டியன் எம்.பி., சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர் ஜே.சி.டி. பிரபாகர் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், கிறிஸ்தவ போதகர்கள், குருமார்கள், ஊழியர்கள் கலந்து கொள்கிறார்கள்.
தமிழ் சுவிசேஷ லூத்ரன் திருச்சபையின் போதகர் எஸ்.எட்வின் ஜெயக்குமார் நிறைவு ஜெபம் செய்கிறார். விழாவில் பிளசி சிஸ்டர்ஸ் பாடல் குழுவினர் கிறிஸ்துமஸ் சிறப்பு பாடல்களை பாடுகின்றனர். ஆர்.வி.ரபிபெர்னார்ட் எம்.பி. நன்றி கூறுகிறார்.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications