For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. பிறந்தநாள்... 66 கிலோவில் கேக்..நாடு முழுவதும் கொண்டாடுகிறது அதிமுக

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்த நாளையொட்டி நாளை தமிழகம் முழுவதும் பிரமாண்ட அளவில் கொண்டாட்டங்களுக்கு அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

தலைநகர் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு வகையான ஏற்பாடுகளை அதிமுகவினர் செய்துள்ளனர். தற்போது ஏழு தமிழர் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு சாதகமான முறையில் கிட்டத்தட்ட ஒட்டு மொத்தத் தமிழகமும் கருத்துக் கொண்டிருப்பதால் அதிமுகவினர் மத்தியில் கூடுதல் உற்சாகம் காணப்படுகிறது.

சென்னையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

66 கிலோ எடையில் கேக்

66 கிலோ எடையில் கேக்

நாளை அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் 66வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் 66 கிலோ எடை கொண்ட கேக் வெட்டப்படுகிறது.

சாதனை மலர்

சாதனை மலர்

ஜெயலலிதா மற்றும் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி சிறப்பு மலரும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் வெளியிடுகிறார்கள்.

ஸ்வீட் விநியோகம்

ஸ்வீட் விநியோகம்

பிறந்த நாளையொட்டி பல்வேறு அணிகளின் நிழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. மேலும் இனிப்பும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்னதானம்- தேர் இழுத்தல்- சிறப்புப் பூஜைகள்

அன்னதானம்- தேர் இழுத்தல்- சிறப்புப் பூஜைகள்

இதுதவிர நலத் திட்ட உதவி வழங்கும் விழா, கோவில்களில் அன்னதானம், தேர் இழுத்தல், சிறப்புப் பூஜைகளுக்கும் அதிமுகவினர் மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்துள்ளனர்.

பாடியில் 6666 பேருக்கு விருந்து

பாடியில் 6666 பேருக்கு விருந்து

பாடியில் உள்ள பிரபல சிவன் கோவிலில் 6666 பேருக்கு சிறப்பு அறுசுவை விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அம்பத்தூரில் உள்ள அனைத்து கோவிலிலும் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

16 கோவில்களில் வழிபாடு நடத்தும் செந்தமிழன்

16 கோவில்களில் வழிபாடு நடத்தும் செந்தமிழன்

சைதாப்பேட்டை அதிமுக எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான செந்தமிழன், 16 கோவில்களில் சிறப்புப் பூஜை, வழிபாடுகளை நடத்தவுள்ளார்.

தேசிய விழா போல

தேசிய விழா போல

கிட்டத்தட்ட தேசிய அளவில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை இந்த முறை அதிமுகவினர் கொண்டாடுகின்றனர்.

டெல்லி - மும்பையிலும் விருந்துகள்

டெல்லி - மும்பையிலும் விருந்துகள்

தலைநகர் டெல்லியிலும், மும்பையிலும் மேலும் பல நகரங்களிலும் அதிமுக வின் பல்வேறு அணிகள் சார்பில் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா

டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா

அதிமுகவுக்கு கிளைகள் உள்ள, ஆதரவு உள்ள டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு அதிமுகவனர் ஏற்பாடு செய்துள்ளனர்.

English summary
ADMK is all set to celebrate its leader and chief Minister Jayalalitha's 66th birth day tomorrow in a grand manner.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X