Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக 46: எம்ஜிஆர் சிலைக்கும் ஜெ. படத்துக்கும் ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை! #admk46

அதிமுகவின் 46வது ஆண்டு தொடக்க விழா அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் 46வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை மற்றும் ஜெயலலிதாவின் படத்துக்கு மரியாதை செய்யப்பட்டது.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுக இன்று தனது 46வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதற்கான விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மலர் தூவிமரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி அலுவலகத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் ஏராளமான அதிமுக தொண்டர்களும் பங்கேற்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+