3 தொகுதிகளிலும் அதிமுக ஆதிக்கம்.. குத்தாட்டம் போட்டு மகளிரணி கொண்டாட்டம்
அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் அதிமுக ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. இதை அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் அதிமுக ஆதிக்கம் செலுத்தியதால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தொண்டர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
கடந்த 19ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய இரண்டு தொகுதிகளில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. திருப்பரங்குன்றத்தில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த 3 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் 3 தொகுதிகளிலுமே ஆரம்பம் முதல் அதிமுக முன்னிலை வகித்து வந்தது.

மதியம் 1.30 மணி நிலவரப்படி, தஞ்சையில் அதிமுக அதிகாரப்பூர்வமாக வெற்றியை பெற்றுவிட்டது. அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அக்கட்சி முன்னிலை வகித்தது.

வாக்கு எண்ணிக்கை நாளான இன்று காலையில் இருந்தே அதிமுகவினர் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒன்று கூடி இருந்தனர். ரிசல்டுகளை அறிந்தததும் பெரும் மகிழ்ச்சி அடைந்த அதிமுக தொண்டர்கள், பட்டாசு வெடித்து, ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

அதிமுகவின் மகளிர் குத்தாட்டம் போட்டு அதிமுகவின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நல்ல செயல்களுக்காகவே இந்த வெற்றியை மக்கள் அளித்திருப்பதாகவும், அவர்தான் தொடர்ந்து வெற்றி பெறுவார் என்றும் அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications