குறி பார்த்து முட்டையை வீசிய "கார்னர்" பாஸ்கர்.. தல்லாகுளம் அக்கப்போரில் ஒரு காட்சி!
மதுரை: அதிமுகவினர் அக்கப்போர் மறுபடியும் மதுரையைப் பதம் பார்த்து விட்டது. அடங்கிப் போன ஒரு விஷயத்தை இன்று மறுபடியும் எழுப்பி ஊதி பெரிதாக்கி விட்டனர். அதிலும் இன்று கார்னர் பாஸ்கர் என்பவர் செய்த சேஷ்டைதான் சற்று சுவாரஸ்யமானது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முன்ஜாமீன் பெற்று, மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று வந்தார்.

இதையடுத்து அங்கு ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டு விட்டனர். மகளிர் அணியினரும் கையில் துடைப்பமும், வாயில் கெட்ட கெட்ட வசவுகளுமாக குவிந்து காத்திருந்தனர்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் வந்தபோது அவருக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். அதற்கு முன்னதாக கார்னர் பாஸ்கர் என்ற அதிமுக கவுன்சிலர் கை நிறைய முட்டையுடன் வந்திருந்தார். இளங்கோவனை நோக்கி வீசப் போகிறாரோ என்று அனைவரும் காத்திருக்க, அவரோ போலீஸ் ஸ்டேஷனை நோக்கி முட்டையை குறி பார்த்து வீசி அடித்தார்.

அதாவது இளங்கோவன் வருவதற்கு முன்பாகவே அட்வான்ஸ்டாக முட்டையை வீசி வி்ட்டார். இதைப் பார்த்த போலீஸார், அவரிடம் வந்து போங்க சார் என்று அனுப்பி வைத்தனர்.

இது காங்கிரஸாருக்கு செம கடுப்பை ஏற்றியது. காவல் நிலையம் மீது ஒருவர் முட்டை வீசுகிறார். அவரைக் கைது செய்யாமல் பத்திரமாக அனுப்பி வைக்கிறார்களே என்று போலீஸாரை கடுமையாக விமர்சித்தனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications