'இன்னுமா சட்டைய கிழிக்கல?' திமுகவினரை உசுப்பிய பேராவூரணி எம்எல்ஏ!
திமுக எம்எல்ஏக்களை பார்த்து இன்னுமா சட்டையை கிழிக்காமல் உள்ளீர்கள் என பேராவூரணி எம்எல்ஏ கேட்டதால் சட்டசபையில் பெரும் சிரிப்பலை ஏற்பட்டது.
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் மாறி மாறி ஒருவரை ஒருவர் கிண்டலடித்து வருகின்றனர். இன்னுமா சட்டையை கிழிக்காம உள்ளீர்கள் என்று அதிமுக எம்எல்ஏ கோவிந்தராசு திமுக எம்எல்ஏக்களை பார்த்து கேட்டது சிரிப்பலையை உருவாக்கியது.
சட்டசபையில் என்னதான் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் அடித்துக்கொண்டாலும் அவ்வப்போது சட்டசபையில் சுவாரசிய சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. எம்எல்ஏக்கள் பேரம் பேசப்பட்டதாக வெளியான வீடியோவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைத்த அதிமுக அரசு இனியும் நீடிக்கக்கூடாது என திமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம் இன்றைய கூட்டத்தில் புயலை வீசும் என எதிர்பார்க்கப்பட்டது.

முதலில் செல்லூர் ராஜூ
இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது முதலே ஆளும் கட்சி எம்எல்ஏக்களும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கிண்டலடித்து வருகின்றனர். செல்லூர் ராஜூவை தெர்மாகோல் தெர்மாகோல் என திமுகவினர் கலாய்த்தனர்.

இன்னுமா சட்டையை கிழிக்கல?
இந்நிலையில் இதற்கு பதிலடியாக திமுகவினரை அதிமுக எம்எல்ஏக்கள் கலாய்த்துள்ளனர். அதாவது போராவூரணி எம்எல்ஏவான கோவிந்தராசு திமுக எம்எல்ஏக்களை பார்த்து இன்னுமா சட்டையை கிழிக்காம உள்ளீர்கள் என்று கேட்டுள்ளார்.

சட்டசபையில் சிரிப்பலை
இதனால் சட்டசபையில் பெரும் சிரிப்பலை ஏற்பட்டது. கடந்த கூட்டத்தொடரின் போது ஏற்பட்ட அமளியில் திமுகவினர் சட்டைக் கிழிக்கப்பட்டது.

தானே சட்டையைக் கிழித்துக்கொண்ட..
எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் தானே தனது சட்டையைக் கிழித்துக்கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அதனை மனதில் வைத்து பேராவூரணி எம்எல்ஏ இவ்வாறு கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications