பதவியேற்பு விழாவிற்கு தயார்: திமுகவிற்கு சென்னை வர்த்தக மையம்... அதிமுகவிற்கு சென்னை பல்கலைக்கழகம்
சென்னை: சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெற உள்ள நிலையில், வெற்றி தோல்வி பற்றி தெரியாத நிலையிலேயே பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகளை திமுக, அதிமுகவினர் செய்யத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியள்ளன.
பதவி ஏற்புவிழவிற்காக திமுக தரப்பு சென்னை வர்த்தக மையத்தை தயார் செய்துள்ளதாகவும் அதிமுக தரப்பினருக்கு வழக்கம் போல சென்னை பல்கலைக்கழகம் நூற்றாண்டு விழா மண்டபமும் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரத்தில் ஆளுநர் மாளிகையிலும் பதவி ஏற்பு விழாவை நடத்த ஆயத்த பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தை அடுத்து ஆளப்போவது யார்? என்கிற எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறிக்கிடக்கிறது. தமிழகத்தின் ஜனநாயகத்திருவிழாவில் பங்கேற்று கடமையாற்றிய வாக்காளர்கள் டீக்கடையில் தொடங்கி ஜ.டி. நிறுவனங்கள் வரை அதைப் பற்றியே பேசி வருகின்றனர்.
மக்களின் தீர்ப்பு யாருக்கு என்பது இன்னும் 20 மணி நேரத்திற்குள் தெரிய வந்து விடும். நிச்சயம் தமிழக மக்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் தங்களை அமர்த்துவார்கள் என்று திமுக, அதிமுக கட்சிகள் உறுதியாக கூறி வருகின்றனர்.

தேமுதிக - மநகூ
இந்த 2 அணிகளுக்கும் மாற்றாக தேர்தல் களத்தில் மக்கள் நலக்கூட்டணி- தே.மு.தி.க.- த.மா.கா. அணியும் வரிந்து கட்டிக் கொண்டு களப்பணியாற்றியது. குறிப்பிட்ட அளவு பெரும்பாலான தொகுதிகளில் இக்கூட்டணி வாக்குகளை பரவலாக பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 80 தொகுதிகளில் மக்கள் நலக்கூட்டணி இது போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.

அதிமுக - திமுக
இது யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சரியாக கணிக்க முடியவில்லை. சில தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கும், சில தொகுதிகளில் தி.மு.க.வுக்கும் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன.

களத்தில் பாமக
அதே நேரத்தில் வட மாவட்டங்களில் செல்வாக்குடன் திகழும் பா.ம.க. அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தி களம் காண்கிறது. பா.ம.க. செல்வாக்குடன் திகழும் தொகுதிகளில் 80 சதவீதத்துக்கும் மேல் வாக்கு பதிவாகி உள்ளது. இது அக்கட்சிக்கு சாதகமாகவே அமையும் என்ற கருத்தும் உள்ளது.

பாஜக - சீமான்
பாஜக தனி அணியாக தேர்தலை சந்தித்தது. சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. இக்கட்சியும் பரவலாக வாக்குகளை பிரிக்கும் என்று கூறப்படுகிறது.

இழுபறி அதிகம்
இது போன்ற ஒரு சூழலில் தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்றும், அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும் இரண்டு விதமான கருத்து கணிப்புகளும், வாக்கு கணிப்புகளும் வெளியாகி உள்ளன. இழுபறி அதிகம் இருக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியது.

எக்ஸிட் போல்
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் அதிமுகவிற்கு சாதகமாக ஒன்றும் திமுகவிற்கு சாதகமாக நான்கும் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் தந்தி டிவியின் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்று கூறியுள்ளது.

உறக்கம் தொலைத்த தலைவர்கள்
இது 2 கட்சியினரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. திக்... திக்... மனநிலையிலேயே அவர்கள் உள்ளனர். இன்று இரவு அரசியல்வாதிகளின் தூக்கம் தொலையப்போவது என்னவோ உண்மைதான்.

நாளை மக்கள் தீர்ப்பு
நாளை சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெற உள்ள நிலையில்,
வெற்றி தோல்வி பற்றி தெரியாத நிலையிலேயே பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகளை திமுக, அதிமுகவினர் செய்யத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியள்ளன.

பதவியேற்பு விழாவிற்கு தயார்
பதவி ஏற்புவிழவிற்காக திமுக தரப்பு சென்னை வர்த்தக மையத்தை தயார் செய்துள்ளதாகவும் அதிமுக தரப்பினருக்கு வழக்கம் போல சென்னை பல்கலைக்கழகம் நூற்றாண்டு விழா மண்டபமும் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களின் தீர்ப்பு எப்படி இருக்குமோ?
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications