இந்த நம்பரை வச்சுக்கங்க.. எதுவா இருந்தாலும் இதுல பேசுங்க.. அதிமுக மா.செக்களுக்கு அறிவுரை
சென்னை: சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் தம்பித்துரை கலந்து கொண்டு மாவட்டச் செயலாளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். மேலும் ஒவ்வொரு தொகுதிக்கும பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் தொலைபேசி எண்ணும் மாவட்டச் செயலாளர்களுக்குத் தரப்பட்டுள்ளதாம். எதுவாக இருந்தாலும் அவரைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளனராம்.
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு தமிழகத்தைப் பரபரப்பாக்கிய முதல்வர் ஜெயலலிதா தற்போது அந்த வேட்பாளர்களை அடுத்தடுத்து மாற்றி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தம்பித்துரை சிறப்புரையாற்றினார்.
அதிமுகவில் 50 மாவட்டங்கள் உள்ளன. அதன் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் இன்றைய கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டனர். அவர்களிடையே கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், எம்.பியுமான தம்பித்துரை பேசினார்.
தேர்தல் பிரசாரம், முதல்வர் ஜெயலலிதாவின் சுற்றுப்பயணம் தொடர்பாக செய்ய வேண்டிய ஏற்பாடுகள், முதல்வர உத்தரவிட்டபடி தேர்தல் பணியாற்றுவது உள்ளிட்டவை குறித்து தம்பித்துரை விளக்கினார். மேலும் முதல்வரின் சுற்றுப்பயண விவரம் குறித்த கையேடும் மாவட்டச் செயலாளர்களுக்கு அளிக்கப்பட்டது.
மேலும் தத்தமது மாவட்டத்திற்குள் வரும் சட்டசபைத் தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களின் தொலைபேசி எண்களும் மாவட்டச் செயலாளர்களிடம் வழங்கப்பட்டது. எதுவாக இருந்தாலும் அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications