அமைச்சருடன் வந்த கார் மோதியதில் கும்பகோணம் அருகே ஒருவர் பலி
கும்பகோணம் அருகே அமைச்சர் துரைக்கண்ணுடன் வந்த கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்: அமைச்சர் துரைக்கண்ணுடன் வந்த கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதிமுக அமைச்சர் துரைக்கண்ணு கும்பகோணம் அருகே தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கபிஸ்தலம் என்ற இடத்தில் அமைச்சருடன் சென்ற அதிமுக பிரமுகர் ஒருவரின் கார் இருசக்கர வாகனம் ஒன்றின் மீது வேகமாக மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற செபஸ்டின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications