ஆட்சியை கலைக்க முடியாதவர்கள் விரக்தியில் ஏதேதோ பேசுகிறார்கள்.. சொல்கிறார் தம்பிதுரை
ஆட்சியை கலைக்க முடியாதவர்கள் விரக்தியில் ஏதேதோ பேசுகிறார்கள் என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஆட்சியை கலைக்க முடியாமல் விரக்தியில் பேசுகிறார்கள்-தம்பிதுரை-வீடியோ
கரூர்: ஆட்சியை கலைக்க முடியாதவர்கள் விரக்தியில் ஏதேதோ பேசுகிறார்கள் என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கரூரில் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு பட கண்காட்சி விழாவை அதிமுக எம்பியும் லோக்சபா துணை சபா நாயகருமான தம்பிதுரை தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக ஆட்சி 100 ஆண்டுகள் நீடிக்கும் என்றார்.

ஆட்சியை கலைக்க முடியாதவர்கள் விரக்தியில் ஏதேதோ பேசுகிறார்கள் என்றும் தம்பிதுரை கூறினார். இதைத்தொடர்ந்து சசிகலா பரோலில் வந்தால் சந்திப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளிக்க தம்பிதுரை மறுத்துவிட்டார். சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்த தம்பிதுரை அண்மையில் சசிகலாவும் தினகரனும் விரைவில் தங்களுடன் இணைவார்கள் என கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications