For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக வெற்றி - போயஸ் கார்டனில் குவிந்த தொண்டர்கள்

Google Oneindia Tamil News

ADMK is jubilant over the LS victory...
சென்னை: தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியதில் இருந்தே அ.தி.மு.க. 37 தொகுதிகளிலும் முன்னணியில் இருந்து வந்தது. இதனால் காலை 9 மணி முதலே போயஸ் கார்டனில் உள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டின் முன்பு தொண்டர்கள் கூடத் தொடங்கினார்கள். நேரம் ஆக ஆக தொண்டர்கள் கூட்டம் அலை மோதியது.

பலர் உற்சாகம் மிகுதியால் ஆடிப்பாடினார்கள். பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர். அமைச்சர் வளர்மதி இனிப்பு வழங்கினார். எம்.எல்.ஏக்கள் கே.பி.கந்தன், அசோக், தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி, அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் வக்கீல் இன்பதுரை, பேரவை நிர்வாகிகள் வடபழனி கந்தசாமி, கந்தன் மற்றும் அண்ணாநகர் பாண்டுரங்கன், முகுந்தன், நடிகர் குண்டு கல்யாணம், மனோ பாலா, முன்னாள் டி.ஜி.பி. அலெக்சாண்டர் உள்பட ஏராளமானோர் வந்து இருந்தனர்.

தொண்டர்கள் உற்சாகம் மிகுதியால் "புரட்சித் தலைவி வாழ்க" என்று குரல் எழுப்பி னார்கள்.போயஸ் கார்டனே இந்த வெற்றியால் விழாக்கோலம் பூண்டுள்ளது.

English summary
ADMK volunteers enjoyed the victory of the party in Poes Garden. ADMK party is leading in many constituencies in Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X