அதிமுக "அடிமைப்பெண்" மாதிரி.. எத்தனை பிரிண்ட் போட்டாலும் ஓடும்.. ராஜேந்திர பாலாஜி வாவ்!!
அதிமுக அடிமைப் பெண் படம் போன்றது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: அதிமுக அடிமைப் பெண் படம் போன்றது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். எத்தனை பிரிண்டுகள் போட்டாலும் 40, 50 ஆண்டுகள் தொடர்ந்து ஓடும் என்று கூறினார்.
ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கவிஞர் வைரமுத்துக்கு எதிராக இந்து அமைப்புகள் பேராட்டங்கள் நடைபெற்றன.
இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனங்களை அள்ளிவிட்டதோடு வைரமுத்துக்கு எதிராக பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளித்து வந்தனர்.

ஹைகோர்ட் தடை
இந்நிலையில் வைரமுத்து மீது தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் சர்ச்சை கருத்து குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ஆண்டாள் ஒரு கடவுள்
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஆண்டாள் ஒரு கடவுள், அந்த கடவுளை கோடிக்கணக்கான மக்கள் வழிபட்டு வருகின்றனர் என்றார். அந்த பக்தர்களின் மனம் புண்படும்படி கருத்து சொல்லக்கூடாது என்றும் அவர் கூறினார்.

இந்துமதம் என்ன கிள்ளுக்கீரையா?
மேலும் வேறு மதமாக இருந்தால் இப்படி ஒரு கருத்தை சொல்ல முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் இந்துமதம் என்ன கிள்ளுக்கீரையா என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பினார்.

பிரச்சனையை விட்டுவிடலாம்
வைரமுத்து எந்த சூழ்நிலையில் இப்படி கூறினார் என்று தெரியவில்லை என்றும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். வைரமுத்து வருத்தம் தெரிவித்து விட்டதால் இந்த பிரச்சனையை விட்டு விடலாம் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

தீபாவளி ரிலீஸ் போன்ற
மேலும் நடிகர்கள் கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஒவ்வொரு நடிகராக கட்சி தொடங்கினால் கட்சிக்கே மரியாதை இல்லாமல் போய்விடும் என்றார். நடிகர்கள் கட்சி தொடங்குவது தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்களை போன்றது என்றார்.

பெட்டிக்குள் போய்விடும்
அந்த படங்கள் இரண்டு மாதங்கள் நன்றாக ஓடும். அதன் பிறகு பெட்டிக்குள் போய்விடும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

அதிமுக அடிமைப்பெண் போன்றது
ஆனால் அ.தி.மு.க. அடிமைப் பெண் போன்றது என்று ராஜேந்திர பாலாஜி கூறினார். எத்தனை பிரிண்டுகள் போட்டாலும் 40, 50 ஆண்டுகள் தொடர்ந்து ஓடும் என்று கூறினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications