'அம்மா' இடத்திற்கு நீங்க தான் வரணும் சின்னம்மா: சசியிடம் அதிமுக தலைவர்கள் வேண்டுகோள்
சென்னை: புரட்சித் தலைவி அம்மா காட்டிய வழியில் நீங்கள் தான் கட்சியை தலைமை தாங்கி வழிநடத்த வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அதிமுகவுக்கு யார் தலைமை தாங்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தான் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்குமாறு அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் கட்சிக்கு தலைமை தாங்கி வழிநடத்துமாறு அதிமுகவினர் சசிகலாவுக்கு மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளனர். சசிகலாவை கட்சியின் தலைவியாக்கக் கூடாது என்று அதிமுகவில் சிலர் எதிர்ப்புக் குரலும் எழுப்பியுள்ளனர்.
சசிகலா தலைமை பொறுப்பு ஏற்பது குறித்து முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதாக ஜெயா பிளஸ் தொலைக்காட்சி சேனலில் கூறியிருப்பதாவது,
சசிகலா தலைமை பொறுப்பு ஏற்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அப்படி மாற்றுக் கருத்து உள்ளவர்கள் உண்மையான அதிமுகவினராக இருக்க முடியாது. ஜெயலலிதாவின் செயல்பாடுகளை அருகில் இருந்து 30 ஆண்டு காலமாக பார்த்தவர் சசிகலா.
அம்மாவை போன்றே சின்னம்மாவுக்கும் கட்சியில் உள்ள அனைவரையும் நன்கு தெரியும். கட்சி தொடர்ந்து நல்ல முறையில் நடக்க வேண்டும் என்றால் சின்னம்மா தான் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும். அம்மா விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புமாறு அதிமுக மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் சசிகலாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் என்றார்.
-
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications