நீலகிரி: 1,13,658 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி- ஆ.ராசா படுதோல்வி
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: நீலகிரியில் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
நடந்து முடிந்த 16வது லோக்சபா தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 8 மணிக்கு தொடங்கியது வாக்கு எண்ணிக்கை. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் அதிமுக 37 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில், நீலகிரி லோக்சபா தொகுதியில் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் 1,13,658 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இத்தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம் :
கோபாலகிருஷ்ணன் (அதிமுக)- 463700
ஆ.ராசா- (திமுக) - 358760
நோட்டா- 46559
காங்கிரஸ்- 37702
ஆம் ஆத்மி- 12525
செல்லாத ஓட்டுகள்- 417


Click it and Unblock the Notifications
