அதிமுகவில் தனி அணியை உருவாக்கும் தென்மாவட்ட மாஜி அமைச்சர்....பரபர திடீர் வதந்தி
சென்னை: தென்மாவட்ட மாஜி அமைச்சர் ஒருவர் தலைமையில் அதிமுகவில் தனி அணி உருவாகப் போவதாக திடீரென வதந்தி கிளம்பியுள்ளது.
முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நீண்டகாலம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்பது அப்பல்லோ மருத்துவர்களின் அறிவிப்பு.

இலாகா இல்லாத முதல்வர்
இதனால் ஜெயலலிதா வசம் இருந்த துறைகள் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா இலாகா இல்லாத முதல்வராக இருந்து வருகிறார்.

திடீர் வதந்தி
அதிமுக எம்.எல்.ஏ.க்களை வளைக்க சில கட்சிகள் முயற்சிப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில் அதிமுகவில் செல்வாக்கை இழந்துவிட்ட தென்மாவட்டத்தைச் சேர்ந்த மாஜி அமைச்சர் ஒருவர் தலைமையில் சில அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக உருவாகப் போவதாக திடீரென வதந்தி கிளம்பியுள்ளது.

கார்டன் கோபம்
சட்டசபை தேர்தலின் போதே போயஸ் கார்டனால் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்ட அந்த அமைச்சரின் சொத்துகள் பலவும் எழுதி வாங்கப்பட்டதாக கூறப்பட்டது. அந்த மாஜி அமைச்சரும் மற்றொரு கட்சியின் மாஜி அமைச்சரும் கூட்டாக பல தொழில்களை செய்து வந்தனர் என்பதாலேயே போயஸ் கார்டன் அவர் மீது கோபம் காட்டியதாம்.

மாற்று கட்சி மாஜி அமைச்சர்
தேர்தல் முடிந்த நிலையில் சற்றே அதிமுகவில் ஏற்றம் கண்ட நிலையில் திடீரென அவரிடம் இருந்து அனைத்து கட்சி பதவிகளும் பறிக்கப்பட்டு ஓரம்கட்டப்பட்டார். தற்போதைய நிலையில் அதிமுகவில் இனி பழைய நிலைக்கு அவர் திரும்ப முடியாது என்பதை சுட்டிக்காட்டியே மாற்று கட்சி மாஜி அமைச்சர் வளைத்துக் கொண்டிருக்கிறாராம்...அவரும் இதுதான் சரி என முடிவெடுத்து தனக்கு ஆதரவான அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக திடீரென வதந்திகள் கிளம்பியுள்ளன.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications