For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போச்சு, அமைச்சர் பழனியப்பன் பதவிக்கு ஆபத்து.. அமைச்சர் தொகுதியிலேயே அதிமுக தோற்றதால்!!

Google Oneindia Tamil News

Palaniappan
தர்மபுரி: தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனின் தொகுதியான பாப்பிரெட்டிபட்டிக்கு உட்பட்ட மொரப்பூர் ஒன்றியத்தில், கேத்திரெட்டிபட்டி 16வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் இடைத் தேர்தலில் அதிமுக தோற்று, பாமக ஆதரவு பெற்ற சுயேச்சை வெற்றி பெற்று விட்டார். இதனால் பழனியப்பன் தரப்பும், அதிமுகவினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பாமக ஜெயித்திருந்தால் கூட பரவாயில்லை. பாமக ஆதரவு பெற்ற சுயேச்சை வெற்றி பெறும் அளவுக்கு அதிமுக மந்தமாக செயல்பட்டுள்ளதால் அதிமுக மேலிடமும் ஆத்திரம் கொள்ளும் என்று உள்ளூர் அதிமுகவினர் பீதியடைந்துள்ளனர்.

பழனியப்பன் தொகுதியான பாப்பிரட்டிபட்டியில் வரும் மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, கேத்திரெட்டிபட்டி 16வார்டு ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தல் முடிவு மாவட்டத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.

அதிமுக சார்பில் கோவிந்தம்மாள் என்பவர் போட்டியிட்டார். பாமக சார்பில் மாம்பழம் சின்னம் தேர்தல் அதிகாரிகள் ஒதுக்க முடியாது என்றதால், சுயேட்சையாக தென்னை மர சின்னத்தில் ராதா என்பவர் போட்டியிட்டார்.

இந்தத் தேர்தலில் இங்கு மொத்தம் 2,837 வாக்குகள் பதிவானது, இதில் அதிமுக வேட்பாளர் கோவிந்தம்மாள் 1,237 வாக்குகளும், பாமக ஆதரவு வேட்பாளர் ராதா 1,552 வாக்குகளும் பெற்றனர். ராதா வென்று விட்டார்.

அமைச்சர் தொகுதியிலேயே இப்படி ஒரு தோல்வியை அதிமுக சந்தித்திருப்பது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் பதவி பறிபோய் விடுமோ என்ற பீதியில் அவரது ஆதரவாளர்கள் மூழ்கியுள்ளனராம்.

English summary
ADMK candidate has lost the by election in Minister Palaniappan's constituency in Dharmapuri dt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X