செங்கல்பட்டு: அதிமுக பிரமுகர் பெட்ரோல் குண்டு வீசி அரிவாளால் வெட்டி படுகொலை

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் அதிமுக பிரமுகர், பெட்ரோல் குண்டு வீசி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 55). அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதியான இவர் செவ்வாய்கிழமை இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

இதனால் பதறிப்போன ராஜகோபால் லேசான காயத்துடன் தப்பி ஓடினார். கண்ணிமைக்கும் நேரத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதனால் பலத்த காயமடைந்த ராஜகோபால் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் காட்டுத்தீ போல பரவியதால் கடைகள் அனைத்தும் அவசர அவசரமாக மூடப்பட்டன. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

ராஜகோபாலுக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி ஜெயா கடந்த முறை செங்கல்பட்டு நகரமன்ற தலைவராக பதவி வகித்தார். 2-வது மனைவி மல்லிகாவும் கடந்த முறை திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட திருமணி ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தார். இப்போது அதே ஊராட்சியில் துணைத்தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

இதில் ஜெயாவின் மகன் செந்தில்குமார் செங்கல்பட்டு நகராட்சியின் 6-வது வார்டு கவுன்சிலராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர். ராஜகோபால் மீது செங்கல்பட்டு டவுன் மற்றும் தாலுகா போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்துள்ளதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் இந்த படுகொலை சம்பவம் நடந்திருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமலிருக்க அந்த பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ராஜகோபாலின் உடலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பார்வையிட்டார். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+