திருவண்ணாமலை கோயில் முன் மர்ம நபர்கள் கொடூரம்.. அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்டார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை: அதிமுக பிரமுகர் கனகராஜ் என்பவரை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் நகர்மன்ற தலைவராக செயலாற்றியவர் அதிமுகவைச் சேர்ந்த கனகராஜ். இவர் வழக்கம் போல் வெளியே சென்றுவிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது, 2 சக்கர வாகனத்தில் 3 பேர் வந்து திடீரென அவரை வழி மறித்துள்ளனர்.

திடுக்கிட்டு நின்ற கனகராஜை முகமூடி அணிந்த 3 பேரும் சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். கண் இமைக்கும் நேரத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன் நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக பிரமுகர் ஏன் கொல்லப்பட்டார், மர்ம நபர்கள் யார், அதிமுகவில் தற்போது நடந்து வரும் அதிகாரப் போட்டிக்கும் இந்த சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications