கூட்டணியில் இல்லாவிட்டாலும் பாஜகவை தாக்காத ஜெ!
சென்னை: இன்னும் தேர்தலுக்கான கூட்டணியே முடிவு செய்யாத நிலையில் பா.ஜ.கவை ஆதரித்து பேசி வருகிறார் ஜெயலலிதா.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸைக் கடுமையாக தாக்குகிறார்.
ஆனால் பா.ஜ.க வை பற்றி பேச்சே எடுப்பதில்லை. இதன் மூலம் தேர்தலுக்குப் பிறகு பாஜக வை அதிமுக ஆதரிக்கும் என்ற கருத்து வலுப்பட்டுள்ளது.

மோடியை வாழ்த்தாத ஜெ:
கடந்த ஆண்டு நரேந்திர மோடி குஜராத் முதல்வராக பதவியேற்றபோது இவர் நேரில் வாழ்த்தினார். பாஜக வின் தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக மோடி அறிவிக்கப்பட்டபோதும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த ஜெயலலிதா பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டபோது வாழ்த்து தெரிவிக்கவில்லை.

முந்தைய பேட்டி:
முன்னதாக ஒரு பேட்டியில் ஜெயலலிதா "நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் தேர்தலில் வென்றாலோ அவரது கட்சிக்குள் பதவி உயர்வு பெற்றாலோ நான் மகிழ்ச்சியடைவேன்" என்று கூறியிருந்தார்.

முதல்வர் ஒகேபிரதமர் நோ:
குஜராத்துக்குள் மோடியின் வளர்ச்சியை ஆதரிக்கும் ஜெய லலிதா அவரது பிரதமர் கனவை அவ்வளவாக ரசிப்பது இல்லை. அதிமுக பொதுக்குழுவில் ஜெய லலிதா பிரதமராக வரவேண்டும் என தீர்மானம் நிறைவேறியபோது மோடிக்கு வாழ்த்து கூறாததன் நோக்கம் இன்னும் தெளிவானது.

கூட்டணி இல்லை:
இதற்கிடையே காங்கிரஸ் ,பாஜக அல்லாத அணியை ஆதரிக்கிறோம் என்ற முழக்கத்தை முன் வைத்து அதிமுக கூட்டணியில் தாங்கள் நீடிப்பதை கம்யூனிஸ்ட்கள் உறுதிபடுத்தியபோது பாஜகவுக்கும் ,அதிமுகவுக்கும் தேர்தல் கூட்டணி இருக்காது என்பது உறுதியானது.

பிரதிபலிக்கும் பிரசார பாட்டு:
அதிமுக தேர்தல் அறிக்கையிலும் ஜெயலலிதா பிரதமராவதை வலியுறுத்தும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிமுக தேர்தல் பிரச்சாரப் பாடலிலும் "புரட்சித் தலைவி பிரதமராவது காலத்தின் கட்டாயம்"என்று முழங்குவது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பு நீடிப்பு:
இந்நிலையில் திங்களன்று காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய ஜெயலலிதா காங்கிரஸையும், திமுக வையும் ஒரு பிடி பிடித்தார். பாஜக வை பற்றி ஒரு வார்த்தை கூட விமர்சிக்கவில்லை. இதனால் தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் அதிமுக கைகோர்க்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

கண்டு கொள்ளாத கம்யூனிஸ்ட்கள்:
காஞ்சிபுரத்தில் தனது முதல் நாள் பிரச்சாரத்தில் ``அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்களியுங்கள்" என்று பேசினார் ஜெயலலிதா. அதேசமயத்தில் அக்கூட்டத்தை கம்யூனிஸ்ட்கள் புறக்கணித்ததும் அதிமுக-வின் கவனத்துக்கு வந்தது.

வார்த்தை தவறவில்லை:
இதைத் தொடர்ந்து மறுநாள் மீனம்பாக்கத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் "அதிமுக-வுக்கு இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள்" என்று மட்டுமே வலியுறுத்தினார். ஒரு இடத்தில் கூட "அதிமுக கூட்டணி வேட்பாளர்கள்' என்ற வார்த்தைகளை அவர் உச்சரிக்கவில்லை.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications