'அம்மா' புகழ்பாடியே கேள்வி நேரத்தை வீணடிக்கின்றனர்: துரைமுருகன் தாக்கு
தூத்துக்குடி: அதிமுகவினர் முதல்வரின் புகழ்பாடியே சட்டசபையில் கேள்வி நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று திமுக துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார். அதன்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன.

தூத்துக்குடியில் நடந்த கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
விதிகள், மரபுகளின் படி தான் தமிழக சட்டசபை நடத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது சபை மரபுகள் மீறப்படுகிறது. சபாநாயகர் மற்றும் அமைச்சர்களுக்கு சபையின் விதிகள் பற்றி தெரியவில்லை. முதல்வரின் புகழ்பாடியே சட்டசபையில் கேள்வி நேரத்தை வீணடிக்கிறார்கள்.
அரசு மக்களின் நிலையை தெரிந்துகொள்ள வேண்டும். எதிர்கட்சிகள் கொடுக்கும் குரல் மூலம் மக்களின் நிலை தெரியும். அதை கேட்கவில்லை எனில் மக்களின் குரல் ஆளும் கட்சிக்கு கேட்காது. மக்களின் குரலை கேட்காத கட்சியாகிவிட்டது அதிமுக என்றார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே!












Click it and Unblock the Notifications