எங்கம்மா சிங்கம்லே… அதிமுக தொண்டர்கள் உற்சாக 'குத்தாட்ட' கொண்டாட்டம்
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒவ்வொரு சுற்றாக அறிவிக்க அறிவிக்க அதிமுக தலைமைக்கழகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலை விழாக்கோலம் பூண்டுள்ளது. தட்டு நிறைய லட்டுக்களுடன் இப்போதே வெற்றிகனியை ருசிக்க ஆரம்பித்து விட்டனர். ஆட்டம் பாட்டம் குத்தாட்டம் என அதிமுக தலைமைக்கழகம் களை கட்டியுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இ.கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரனை விட 10000 வாக்குகள் அதிகமாகவே பெற்று முன்னிலையில் பெற்று வருகிறார்.

மொத்தம் 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதுவரை 5 சுற்று முடிவுகள்தான் முடிந்துள்ளன. சி.மகேந்திரனை விட இப்போதே 45000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார் ஜெயலலிதா.
ஒவ்வொரு சுற்றின் முடிவுகள் அறிவிக்கப்படும் போதும் அதிமுக தலைமை அலுவலகத்தில் குவிந்துள்ள தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்புகின்றனர்.

அம்மா வாழக... அம்மாவுக்கே வெற்றி... நிரந்தர முதல்வர் அம்மா... எங்கம்மா சிங்கம்லே என்றெல்லாம் குரல் எழுப்பி தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர். ஆயிரம் வாலா சரவெடிகள் வெடிக்கப்படுகின்றன. பல மாவட்டங்களில் இருந்தும் வந்துள்ள அதிமுக நிர்வாகிகள் தட்டு தட்டாக லட்டுகள், ஜாங்கிரிகளை குவிந்துள்ள தொண்டர்களுக்கு கொடுத்து மகிழ்கின்றனர். அவ்வை சண்முகம் சாலையில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் வெற்றியை கொண்டாடி வருகின்றனர் அதிமுகவினர். அதிமுக மகளிர் அணி தொண்டர்கள் 'மெய் மறந்த' நிலையில் குத்தாட்டம் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

போயஸ் கார்டன் பகுதியில் குவிந்துள்ள அதிமுக தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். மகளிர் அணியினர் தட்டு நிறைய லட்டுக்களை வைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் உற்சாகமாக ஊட்டி மகிழ்ந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications