மதுரை பொதுப் பணித்துறை அலுவலகத்தில் பயங்கரம்- அதிமுகவினர் அடிதடி.. அரிவாள் வெட்டு!
மதுரை: மதுரை தல்லாகுளத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் டெண்டர் தொடர்பாக ஆளுங்கட்சியினரிடையே கடும் மோதல் வெடித்தது. இதில் சிலருக்கு அரிவாள் வெட்டும் விழுந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலகம் தல்லாகுளத்தில் உள்ளது. பென்னி குக் வளாகம் என்று இதற்குப் பெயர். அந்த பென்னிகுக் வளாகத்தில் இன்று அதிமுகவினர் பெரும் ரகளை செய்து விட்டனர்.

மதுரை அரசு மருத்துவமனை டெண்டர் தொடர்பாக இன்று அங்கு பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது பொதுப்பணித்துறை ஒப்பந்தகாரரான குணசேகரன் தரப்புக்கும், மற்றொரு ஒப்பந்தக்காரரான காந்தி தரப்பினருக்கும் போட்டி ஏற்பட்டது. இது மோதலமாக மாறியது. இதையடுத்து இரு தரப்பும் அரிவாள் உள்ளிட்டற்றுடன் அடித்துக் கொண்டனர். இரு தரப்புமே அதிமுகவைச் சேர்ந்தவர்களாம்.
இதில் காந்தி தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. அவருடன் வந்த போஸ் என்பவரும் வெட்டப்பட்டார். அரசு அலுவலகத்தில் ஆயுதங்களுடன் மோதல் மூண்டது குறித்து போலீஸாருக்குத் தகவல் போனது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர்.
விசாரணை நடத்தி குணசேகரன், பாண்டியன், ஆழ்வார் ஆகியோரைக் கைது செய்தனர். பென்னி குக் வளாகத்தில் அரிவாள்களுடன் அதிமுகவினர் மோதிக் கொண்டதால் பொதுப்பணித்துறை வளாகமே பரபரப்பாகி விட்டது.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications