1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.. அதற்குள்ளாகவே பேனர் வைத்த காஞ்சி. அதிமுக!!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், வழக்கறுத்தீசுவர் கோயில் அருகே அம்மா அவர்களின் ஆசியுடன் கழக தோழர்கள் கடுமையாக உழைத்து 1,68,099 வாக்குகள் அதிகம் பெற்று மாபெறும் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் அவர்களை வாழ்த்துகிறோம் என்று பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக வென்றதாகவும் அதில் கூறப்பட்டிருந்ததால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் முடிவு இன்னும் வெளியாகாத நிலையில் வாக்கு வித்தியாசத்தைத் துல்லியமாக குறிப்பிட்டு எப்படி இப்படி பேனர் வைத்தனர் அதிமுகவினர் என்பது மக்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் செல்வம், மதிமுக சார்பில் மல்லை சத்யா, காங்கிரஸ் சார்பில் விஸ்வநாதன் எம்.பி. ஆகியோர் தேர்தலில் களம் இறங்கினர்.
இங்கு பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்புக்குழி அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை வரும் மே 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் நகர்மன்ற உறுப்பினரும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளருமான கே. பரிமளம் சார்பில் காஞ்சிபுரத்தின் பிரதான சாலையான காந்திசாலை வழக்கறுத்தீசுவர் கோயில் அருகே 4 பிரமாண்டமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அம்மா அவர்களின் ஆசியுடன் கழக தோழர்கள் கடுமையாக உழைத்து 1,68,099 வாக்குகள் அதிகம் பெற்று மாபெறும் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் அவர்களை வாழ்த்துகிறோம் என்று அந்த பிளக்ஸ் பேனர்களில் வாழ்த்து செய்தி பதிவு செய்யப்பட்டிருந்தது. ஒரு பேனரில் ''40 எம்.பி.யையும் பெற்றோம்'' என்ற வாக்கியமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பிளக்ஸ் பேனர்களால் காஞ்சிபுரத்தில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் கடும் போக்குவர்த்து நெரிசல் ஏற்பட்டது.
உடனடியாக போலீஸார் விரைந்து வந்தனர். அதேபோல, காஞ்சிபுரம் தாசில்தார் பானுவும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சர்ச்சைக்குரிய பேனர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டு, அதை அகற்ற உத்தரவிட்டார். உடனடியாக பேனர்கள் காவல்துறை உதவியுடன் வருவாய்த்துறையினர் அகற்றினர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications