"அம்மா" நடந்தா தேரோட்டம்... வெளியே வந்தா திருவிழா.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா....!!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா எப்போது வெளியே வந்தாலும் சென்னையை ஸ்தம்பிக்க வைத்து வருகிறார்கள் அதிமுகவினர். இப்படியே போய்ட்டிருந்தா எப்படி என்று சென்னை மக்கள் முனுமுனுக்கும் அளவுக்கு நிலைமை போய்க் கொண்டுள்ளது.
ஜெயலலிதா போகும் பாதையெல்லாம் இருபக்கமும் அதிமுகவினர் திரண்டு வருகிறார்கள். இதனால் ஜெயலலிதா போகும் பாதையெல்லாம் டிராபிக் ஜாம் ஆகிறது.
ஜெயலலிதா முதல் முறையாக ஜாமீனில் விடுதலையாகி வந்தது முதல் இது தொடர் கதையாகியுள்ளது.

கர்நாடக சிறையிலிருந்து மீண்டு வந்தபோது
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைதாகி சிறைக்குச் சென்று பின்னர் சுப்ரீம் கோர்ட் மூலமாக ஜாமீன் கிடைத்து சென்னைக்குத் திரும்பியபோது, அவரது வீடு வரைக்கும் அதிமுகவினர் ஆயிரக்கணக்கில் திரண்டு கொட்டும் மழையோடு டிராபிக்கை ஜாம் செய்து விட்டனர்.

முதல் முறையாக வந்தபோது
பின்னர் இந்த சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யபட்டு தனது போயஸ் கார்டன் வீிட்டை விட்டு ஜெயலலிதா முதல் முறையாக வெளியே வந்து தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்தபோது சென்னை போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துப் போனது.

வேட்பு மனுத் தாக்கலின்போது
இன்று ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார் ஜெயலலிதா. இப்போதும் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டு விட்டனர்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
வழக்கம் போல சாலையின் இரு மருங்கிலும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அதிமுகவினர் அதகளப்படுத்தி விட்டனர். இதனால் அவர் போன பாதையெங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வந்தார் எம்.ஜி.ஆர்.
வழக்கம் போல விதம் விதமான மேக்கப்புடன் பல அதிமுகவினரைக் காண முடிந்தது. எம்.ஜி.ஆர் கெட்டப்பிலும் ஒருவர் வந்திருந்தார்.

வழக்கம் போல குத்துப் பாட்டு
வழக்கம் போல அதிமுக மகளிர் பலர் குத்தாட்டம் போடத் தவறவில்லை. அவர்களோடு சில அதிமுக ஆண்களும் இணைந்ததால் அந்த இடமே கலகலப்பாகிப் போனது.
எப்பப்பா இது முடியும்??
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications