பாட்டி படுக்கையாசனம்.. குந்த வைத்து கும்பிடாசனம்.. அசத்தும் அதிமுக யோகா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேட் போட்டு தினசரி செய்வது யோகாசனம். வருடா வருடம் ஜூன் 21ம் தேதி மட்டும் செய்தால் அது மோடி ஆசனம்.. தினசரி அம்மா காலில் விழுந்து விழுந்து எழுந்திருப்பது அம்மா ஆசனம் என்ற சொலவடை வந்தாலும் வரலாம்..!

நேற்று பலரும் யோகாசனம் செய்து அசத்தினர். விஜயகாந்த் கூட யோகா செய்தார். எங்கு பார்த்தாலும் யோகா யோகா யோகாதான்.

திமுக தலைவர் கருணாநிதியும் கூட தனது பேஸ்புக் பக்கத்தில் தான் முன்பு செய்த யோகா படத்தைப் போட்டு ஊரோடு ஒத்துவாழ் என்ற பழமொழியை மெய்ப்பித்தார். அதேபோல திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் கூட யோகா செய்வது போன்ற படத்தைப் போட்டிருந்தார்.

ஆனால் அதிமுகவினர்தான் நேற்று யாரும் யோகா செய்தது போலத் தெரியவில்லை. அதான் தினசரி செய்கிறோமே பிறகு ஏன் தனியாக வேறு செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ...

சரி அதிமுகவினர் செய்து வரும் யோகாசனம் குறித்த ஒரு பார்வை...

நீல்டவுன் ஆசனம்

நீல்டவுன் ஆசனம்

இதில் முதல்வர் ஜெயலலிதாவின் காலில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விழுந்து வணங்கும் படமாகும். இதை நீல் டவுன் ஆசனம் என்று கூட பெயர் வைத்துக் கூப்பிடலாம்.. காட்சியைப் பார்த்து மெய்யுருகி உட்கார்ந்திருப்பவர் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன்.

நெடுஞ்சான் கிடக்கை ஆசனம்

நெடுஞ்சான் கிடக்கை ஆசனம்

இது நெடுஞான் கிடையாக படுத்து பரவசத்தோடு வணங்கும் ஒரு பழைய படம். அவர் எந்த அளவுக்கு படுத்திருக்கிறார் என்பதையும், படுத்துக் கிடப்பவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு நிதானமாக எழுந்திருக்கும் வரை ஜெயலலிதா மகா பொறுமையுடன் காத்திருப்பதையும் படத்தில் காணலாம்.

பாட்டி படுக்கையாசனம்

பாட்டி படுக்கையாசனம்

இதில் இந்தப் பாட்டி கீழே படுத்து மிக மிக நிதானமாக தனது வணக்கத்தை ஜெயலலிதாவுக்கு வைக்கிறார். அதை ரசித்து பெருமிதத்துடன் பார்த்து நிற்கிறார் ஜெயலலிதா.

ஹாப் சிட்டிங் ஹாப் நீலிங் ஆசனம்

ஹாப் சிட்டிங் ஹாப் நீலிங் ஆசனம்

இது பாதி உட்கார்ந்து, பாதி உட்காராமல் அதாவது ஒரு அரைகுறை ஆசனம். ஆசனமே இல்லாமல் இருந்தும் உட்கார்ந்திருப்பது போல பாவனை இது. மிகவும் கஷ்டமான இந்த ஆசனம், மூட்டு வலுப்பெற உதவலாம் என்று தெரிகறது.

குந்த வைத்து கும்பிடு ஆசனம்

குந்த வைத்து கும்பிடு ஆசனம்

இந்தப் படத்திலும் ஓ.பன்னீர் செல்வம் பாதி அமர்ந்த நிலையில் பாதி எழுந்த நிலையில் அதாவது கடவுள் பாதி மனிதன் பாதி என்ற ரீதியில் வணக்கம் வைக்கிறார். இதற்கு குந்த வைத்து கும்பிடு ஆசனம் என்றும் ஒரு பெயர் உண்டாம்.

ஹெிகாப்டர் ஷாட் கூட உண்டு பாஸ்

ஹெிகாப்டர் ஷாட் கூட உண்டு பாஸ்

எப்படி கிரிக்கெட்டில் டோணி ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பாரோ அதேபோல அதிமுகவினரும் கூட ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பதில் கில்லாடிகள். அதாவது ஹெலிகாப்டரில் ஜெயலலிதா வரும்போது கீழே இருந்தபடி கும்பிட்டும், கீழே விழுந்து முரட்டு மீசையில் மண் ஒட்டினாலும் கவலைப்படாமல் வணக்கம் வைப்பதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே.

அதிக ஆசனம் போட்ட ஓ.பன்னீர் செல்வம்

அதிக ஆசனம் போட்ட ஓ.பன்னீர் செல்வம்

அதிமுக அமைச்சர்களிலேயே அதிக அளவில் ஆசனம் போட்டவர் ஓ.பன்னீர் செல்வம்தான். காரணம், இவர்தான் ஜெயலலிதாவுக்கு மிக மிக அருகில் இருக்கிறார். எனவே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இவர் டக்கென்று குனிந்து ஒரு கும்பிடு வைத்து மற்றவர்களின் வாய்ப்புகளைத் தட்டிப் பறித்து விடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+