பெண்ணுடன் சேர்த்துப் படம் பிடித்து முத்துக்குமாரசாமியை அசிங்கப்படுத்த முயன்ற அதிமுகவினர்!
சென்னை: நெல்லை வேளாண்மைத்துறை அதிகாரி முத்துக்குமாரசாமியை பெண் பிரச்சினையில் சிக்கவைக்க முயற்சி நடந்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுகவினரால் அடித்து துன்புறுத்தப்பட்டதாலும், பெண்ணுடன் சேர்த்து வைத்து மொபைல் போனில் படம் எடுத்த காரணத்தினாலும் அவமானத்திற்கு பயந்து முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டிரைவர்கள் நியமன விவகாரத்தில் முத்துக்குமாரசாமியை அமைச்சரின் பி.ஏவும், தலைமை பொறியாளரும் மட்டும் மிரட்டவில்லை. அதிமுக அடிப்பொடிகள் கூட மிரட்டியுள்ளனர்.
நெல்லை பாலபாக்யா நகரில் உள்ள ஒரு வீடு மற்றும் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்து முத்துகுமாரசாமியை மிரட்டியதாகவும், பாலபாக்யா நகரில் அவரை தாக்கியதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த பிரச்சனை தொடர்பாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லையில் விசாரணை
இதற்காக சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று அவர் நெல்லை வந்து தனது விசாரணையை தொடங்கி உள்ளார்.
பெண்ணை வைத்து நாடகம்
தற்கொலை செய்த முத்துகுமாரசாமியை நெல்லையில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அப்போது ஒரு பெண்ணை வைத்து நாடகமாடி தவறாக செல்போன் மூலம் படம் எடுத்து மிரட்டி இருக்கலாம் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அவமானம் தாங்காமல்
இந்த பிரச்சனையில்தான் முத்துகுமாரசாமியை சிலர் தாக்கி உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் தன்னை அவமானப்படுத்தி விடுவார்களோ என்று அவர் மனவேதனை அடைந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதால் விரைவில் இந்த தற்கொலை வழக்கில் உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications