அதிமுக எம்.எல்.ஏ. சீனிவேலு மரணம்...புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்கும் நாளில் துயரம்!
மதுரை: உடல் நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சீனிவேலு இன்று மரணம் அடைந்தார்.
சட்டசபை தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் சீனிவேலு(65) போட்டியிட்டார். தனது வயதையும் பொருட்படுத்தாது அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேர்தல் பிரச்சார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டதால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரது உழைப்பு வீண் போகாமல் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் வெற்றி பெற்ற கையோடு அவரது உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டதால் மதுரையில் உள்ள வடமலையான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்தபோதிலும் கடந்த 6 நாட்களாகவே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
15வது சட்டசபை இன்று கூடி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்கும் நிலையில் சீனிவேலுவின் மரணம் அதிமுகவினரை கவலை அடைய வைத்துள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications