ஆளுநர் முன்பு குற்றவாளிகள் ஜெ., சசியை வாழ்த்தி கோஷம்.. முதல் வரிசையில் ஃபெரா தினகரன்!

பெரா வழக்கு குற்றவாளி டிடிவி தினகரன் முதல் வரிசையில் அமர்ந்திருக்க, குற்றவாளிகள் ஜெயலலிதா, சசிகலாவிற்கு வாழ்த்து முழக்கத்தோடு புதிய அமைச்சரவை பதவியேற்றது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது. அப்போது சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகள் ஜெயலலிதா, சசிகலாவிற்கு வாழ்த்து முழக்கம் ராஜ்பவனை அதிரவைத்தது. பெரா வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டுள்ள டிடிவி தினகரன் முதல்வரிசையில் அமர்ந்திருந்தார்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். 2 மாதங்கள் பதவி வகித்த அவர் திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

ADMK MLAs hail Convicts Jayalalitha and Sasikala in front of Govenor

சசிகலா தம்மை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவை கேட்டுக் கொண்டார். ஆனால் சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு நிலுவையில் இருந்ததால் அவரை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதியன்று சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதிமுக சட்டசபை குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக முதல்வராக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர். வழக்கம் போல கோரஸாக அமைச்சர்கள் பதவியேற்றனர். முதல்வராக கடவுள் மீது ஆணையாக பதவியேற்ற உடன் வாழ்த்து கோஷம் ராஜ்பவனை அதிரவைத்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, சிறையில் உள்ள சசிகலா ஆகியோருக்கு வாழ்த்து முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த பதவியேற்பு விழாவின் போது டிடிவி தினகரன் முதல்வரிசையில் அமர்ந்திருந்தார். இவர் பெரா வழக்கு குற்றவாளி, ரூ.28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிமுக துணை பொதுச்செயலாளராக உள்ளதால் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்.

அதிமுக அரசு அமைந்து கடந்த 10 மாதத்தில் 3வதாக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிச்சாமி 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். கடந்த 10 நாட்களாக தமிழக அரசியலில் நீடித்த குழப்பம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது என்றே கூறலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+