இன்று மாலை 3 மணிக்கு அதிமுக எம்.எம்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு தினகரன் அழைப்பு
அதிமுக எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் டிடிவி தினகரன்.
சென்னை: தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில், இன்று மாலை 3 மணிக்கு அ.தி.மு.க., எம்.எம்.ஏ.,க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்காக முழுவீச்சில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், வேலுமணி, சி.வி சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதையடுத்து சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி.சண்முகம் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது சசிகலா குடும்பத்தை கட்சி மற்றும் ஆட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக அவர்கள் தெரிவித்தனர். சசிகலா குடும்பத்தின தலையீடு ஆட்சியிலும் கட்சியிலும் எள்ளளவும் இருக்கக்கூடாது என அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் அடையாறு வீட்டில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடத்தினர். இதில் எம்எல்ஏக்கள் ஜக்கையன், தங்கத்தமிழ் செல்வன், கதிர்காமு, வெற்றிவேல், செல்வ மோகன்தாஸ், சாத்தூர் சுப்ரமணியன், ஏழுமலை, சின்னத்தம்பி மற்றும் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், அதிமுக அம்மா அணி செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனை கூட்டம் முடிந்த நிலையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்துக்கு பின்னர் முக்கிய முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications