யாராவது கலகக் குரல் எழுப்பட்டும்...அப்புறம் இருக்கு வேடிக்கை.. காத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்
சசிகலா மீது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனராம். ஆனால் யார் தலைமையில் சசிகலாவுக்கு எதிராக அணிதிரள்வது என்பதில்தான் அவர்கள் தயங்குகிறார்களாம்.
சென்னை: சசிகலா அதிமுக பொதுச்செயலரான நிலையில் நடத்தி வரும் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு என்ற நாடகம் இன்றுடன் முடிவடைகிறது. என்னதான் சசிகலாவை ஆதரிப்பதாக சொல்லிக் கொண்டாலும் அதிமுக எம்.எல்.ஏ.க்களோ யாராவது கலகக் குரல் எழுப்பி தனி அணி அமைத்துவிடமாட்டார்களா? என்றே காத்திருப்பதாகவே அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சசிகலாவுக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்பிக்கள் முழு ஆதரவு இருக்கிறது என்ற தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வேறுவழியில்லாமல் இவர்கள் சசிகலாவை ஆதரிக்கிறார்கள் என்பதுதான் யதார்த்தம்.

தீபாவுக்கு ஆதரவு
சசிகலாவுக்கு எதிராக அதிமுகவுக்கு உள்ளே இருந்து வலுவான குரல் எதுவும் வெளிப்படவில்லை. ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவை தலைவராக வலியுறுத்தி அதிமுக தொண்டர்கள் தன்னெழுச்சியான கிளர்ந்து எழுந்து வருகின்றனர்.

தலைவர்கள் ஆதரவு?
தீபாவும் இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. தீபாவை ஆதரிப்பதாக அதிமுக தலைவர்கள் யாரும் இதுவரை அறிவிக்கவும் இல்லை.

விஸ்வரூபமெடுக்கும்
அப்படி அதிமுக நிர்வாகிகளும் தீபாவை ஆதரிப்பதாகவோ அல்லது சசிகலாவை எதிர்ப்பதாக கலகக் குரல் எழுப்பிவிட்டால் அது கட்டுப்படுத்த முடியாத விஸ்வரூபமாகிவிடும் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.

பூனைக்கு மணிகட்டுவது யார்?
தற்போதைய அதிமுக எம்எல்ஏக்கள் பலரும், நிச்சயம் எங்களுக்கு சசிகலாவை பிடிக்கவில்லைதான்... சரி யார் தலைமையில் அணி திரள்வது? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்... அதிமுக நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் ஒன்றிரண்டு பேர் கலகக் குரல் எழுப்பிவிட்டாலே போதும்.. அது கட்டுக்கடங்காத பெருங்கோபமாக சசிகலாவுக்கு எதிராக வெடிக்கும்... அப்போது இருக்கு சசிகலாவுக்கு எதிரான கச்சேரி என பொங்குகின்றனர்...
விஸ்வரூபத்துக்கு காத்திருப்பு!
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications