அடுத்த லிஸ்ட் ரெடி.. தவெகவில் இணையும் அதிமுக எம்எல்ஏக்கள்.. அமைச்சர் ஷாஜகான் கருத்தால் சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

தென்காசி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை அடியோடு மாற்றியுள்ளது. தவெகவுக்கு ஆட்சியமைப்பதற்கான மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் அதிமுக எம்எல்ஏக்களை தவெகவில் இணைய வைப்பதாக புகார் உள்ளது. மொத்தம் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். மதுராந்தகம், தாராபுரத்தில் அவர்களே தவெக வேட்பாளராக இறங்கி வெற்றி பெற்றுள்ளனர். அதிமுகவில் இருந்து மேலும் 15 எம்எல்ஏக்கள் தவெகவில் இணையவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அந்த சர்ச்சை ஓய்வதற்குள் இப்போது மற்றொரு அமைச்சர்ன ஷாஜகானும் அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைய தயாராக இருப்பதாக கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

தென்காசியில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியில் லஞ்சம், ஊழல் இல்லாத நிர்வாகம் என அறிவித்துள்ளார். இதனால் எதிர்க்கட்சிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி பயணிக்கிறார்கள். அதனால் பல்வேறு எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவதற்கு தயாராக உள்ளனர். இந்த செய்தி பலர் மூலமாக வந்து கொண்டு தான் இருக்கிறது.

TVK Shajahan

தவெகவில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள்

அதிமுக தலைமையின் மீது அந்தக் கட்சியின் தொண்டர்கள் மிகுந்த நம்பிக்கையை இழந்துள்ளனர். மதுராந்தகம், தாராபுரம் போன்ற அதிமுக கோலோச்சிய பகுதிகளில் கூட மிகப்பெரிய பின்னடைவை அதிமுக சந்தித்துள்ளது. அதனால் அதிமுகவின் எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகம், சட்டத்துக்குட்பட்டது, அவர்கள் விருப்பப்படி பதவியை ராஜினாமா செய்து அவர்களின் உரிமை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுக்குழுவில் மிகத்தெளிவாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலிலும், 2029 நாடாளுமன்ற தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் பயணிப்பது என்று முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றிள்ளோம். அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. வறட்சி, கடும் மழை போன்ற இயற்கை பேரிடர்களால் உலகம் முழுவதும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது.

மீண்டும் மீண்டும் சர்ச்சை

இதில் விலை ஏற்றமும் ஒன்று. புதிதாக வந்துள்ள ஆட்சி, அதை எல்லாம் ஆய்வு செய்து அதற்கு தீர்வு கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் அதற்கான தீர்வு கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்" என்றார். அதிமுகவில் இருந்து 15 எம்எல்ஏக்கள் தவெகவில் இணையவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அந்த சர்ச்சை ஓய்வதற்குள் இப்போது மற்றொரு அமைச்சரும் அதே கருத்தை பிரதிபலித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+