செஞ்சி சிறுமி எங்கே? பாறை இடுக்குகளில் பாயும் டிரோன்.. 9 நாளாச்சுங்க.. இன்னும் துப்பு கிடைக்கல

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே காணாமல் போன 7 வயது சிறுமியை மீட்டுத் தருமாறு, அவரது தாயார் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். குழந்தை மாயமாகி 9 நாட்கள் கடந்தும் எந்த தகவலும் இதுவரை கிடைக்காததால், சிறுமியின் பெற்றோர் தவித்து கொண்டிருக்கிறார்கள்.. இதற்கிடையே, சிறுமியை கண்டுபிடிக்க போலீசாரும், அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

செஞ்சி அருகே ஆலம்பூண்டி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமாவதி. அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

Gingee Girl Missing Case Villupuram Missing Case Drone Search Operation

கடந்த 11-ம் தேதி சிறுமி தனது பிறந்தநாளைக் குடும்பத்தினருடன் கொண்டாடினார். அன்று இரவு பெற்றோருடன் வீட்டில் தூங்கிய சிறுமி, மறுநாள் அதிகாலை மாயமானார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அம்மாவின் வேண்டுகோள்

சிறுமி மாயமாகி 8 நாட்கள் கடந்த நிலையிலும் எந்தத் தகவலும் கிடைக்காததால், தனது மகளை மீட்டுத் தருமாறு தாயார் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "என்ன ஆச்சுன்னு எனக்கு எங்களுக்கே சொல்ல தெரியல.. எங்களையே ஏதோ மாயம் பண்ணி, மந்தம் பண்ணி எங்கள தூங்க வச்சி, என் புள்ளைய வெளிய வர வச்சு கூட்டும் போயிருக்கலாம்.. எங்களுக்கு தூக்கத்தில் ஏதாவது செய்துட்டு போயிட்டாங்களா தெரியல.. வேறு ஏதாவது நடந்ததா தெரியல.. இங்கேயே ஏதாவது நடந்திருந்தால் கண்டிப்பாக எனக்கு தெரிந்திருக்கும்.

8 நாள் ஆகிடுச்சு.. இதுவரைக்கும் எந்த தகவலும் இல்லை. முதலமைச்சர் நேரடியாக வந்து எங்களை பார்த்து, எங்க குழந்தையை கண்டுபிடிச்சி கொடுக்கணும்னு கேட்டுக்கறேன்" என்று கண்ணீருடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

திணறும் விழுப்புரம் போலீஸ்

இதனிடையே, சிறுமியை தேடி கண்டுபிடிப்பதில் போலீசார் தவித்து வருகிறார்கள்.. ஒரு துப்புகூட இதுவரை கிடைக்கவில்லை.. விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதுவரை 200-க்கும் மேற்பட்ட போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீடு வீடாகவும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆலம்பூண்டி, சத்தியமங்கலம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிணறுகள், குட்டைகள், குளங்கள் ஆகிய இடங்களிலும் போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மோப்ப நாய், ட்ரோன் என அனைத்துவிதமான உதவியுடனும் தேடுதல் நடத்தப்பட்டது. கிணறுகளில் பாதாள ஆய்வுக் கருவி மூலமாகவும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சிசிடிவி காட்சிகள்

இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க, செஞ்சி உட்கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விசாரணையைத் தீவிரப்படுத்த டிஐஜி உத்தரவிட்டுள்ளார்..

இதன் தொடர்ச்சியாக, ஆலம்பூண்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை மீண்டும் ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே ஆய்வு செய்தபோது தெளிவான தடயங்கள் கிடைக்காததால், சென்னை மற்றும் விழுப்புரத்திலிருந்து சிசிடிவி தொழில்நுட்ப நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சிசிடிவியில், இரவு நேரக் காட்சிகளை தெளிவுபடுத்துதல், வாகனங்களின் நடமாட்டத்தைக் கண்டறிதல், சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்தல் ஆகியவற்றில் நிபுணர்கள் கவனம் செலுத்த உள்ளனர்.

மலைப்பகுதிகளிலும் தீவிர தேடுதல்

அதேபோல, சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது வழிதவறிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஆலம்பூண்டி மலைப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மலைப்பகுதியிலுள்ள பாறை இடுக்குகள், புதர்கள், குகைகள் போன்ற இடங்களில் தேடுதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆட்கள் எளிதில் நுழைய முடியாத பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் மூலமும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

மோப்பநாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று கரும்பு தோட்டத்தில் நின்றுவிட்டதால்.. அதனால் அங்கேயும் சல்லடை போட்டு தேடி கொண்டிருக்கிறார்கள்.. சந்தேகத்தின் பேரில் ஆலம்பூண்டி சிவன் கோவிலில் தங்கியிருந்த தஞ்சாவூரை சேர்ந்த சாமியாரிடம் விசாரணை நடக்கிறது..

இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் சிறுமி இருக்கும் இடம் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.. இதனால் விழுப்புரத்தில் பரபரப்பு தொடர்ந்து நிலவுகிறது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+