ராஜயோகம் பெறும் மகர ராசி.. 7 நாட்களில் வரப்போகும் குட்நியூஸ்.. முழு பலன்கள்
Rasi palan this week: அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 3 ஆம் தேதி முதல் ஐப்பசி 8 வரை) காலகட்டத்தில் மகரம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். கும்பம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிக்கு இந்த வாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் இந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது.
அதன்படி, அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 3 முதல் 8 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மகரம் ராசி பலன்
மகரம் ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவியின் உடல்நிலையிலும், மனைவி கணவர் உடல்நிலையிலும் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்றும் அமைப்பு உள்ளது.
சிக்கல்
பெரும் செல்வாக்கு ஏற்படக்கூடிய காலகட்டம். இதுவரை இருந்து வந்த சிக்கல்கள், பாதிப்புகள் நீங்கும். வண்டி வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக வாகனங்களை இயக்குவது நல்லது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மருந்து, மாத்திரைகளை அலட்சியப்படுத்தினால் பெரும் சிக்கலில் சிக்குவதற்கான வாய்ப்புள்ளது.
தடைகள் நீங்கும்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, பயணங்களில் அனுகூலம் காணப்படும். சம்பள உயர்வு கிடைக்கும். படிப்பில் இருந்த தடை பரிபூரணமாக நீங்கும். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். பெரும் செல்வாக்கும், கெளரமும் ஏற்படும். சிக்கல்களில் இருந்து பரிபூரணமாக நிவர்த்தியாகும். பெரும் செல்வாக்கு ஏற்படக்கூடிய அமைப்பு.
ஆரோக்கியம்
விநாயகர் வழிபாடு பெரும் செல்வாக்கையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். அப்பாவுடைய ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனை, அடிபடுவது, பயணங்களில் பிரச்சனை, கழிவுப் பாதை பிரச்சனை போன்றவற்றில் இருந்து விடுபடக்கூடிய காலகட்டமாக இருக்கும். 10 ஆம் இடத்தில் இருக்கும் குரு புதிய வேலைகளைக் கொடுப்பார்.
தொட்டது துலங்கும்
புதிய புதிய விஷயங்களை எடுத்து ஜெயிக்க வைப்பார். தொழில் ஸ்தானத்தில் 3 கிரகங்கள் இருப்பதால் பழைய நட்புகள், நண்பர்கள் மூலமாக நன்மைகள் நடக்கும். புதிய முயற்சிகள் கைகூடக்கூடிய அற்புதமாக காலகட்டம். திட்டமிட்ட விஷயங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். மன நிம்மதி கிடைக்கும். வேலை, தொழிலில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும்.
புதிய வேலை
வேலை கிடைக்கக்கூடிய யோகம் ஏற்படும். வேலையில் பெண்கள், நிதி சார்ந்த விஷயங்களில் இருப்பவர்கள், பயணங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பயணங்களில் இருப்பவர்கள் கவனம் தேவை. இவர்களுடைய அரசியலில் சிக்கிக் கொள்ளாமல் கவனமாக இருப்பது நல்லது. பெரிய மாற்றம் கிடைக்கும்.
வழிபாடு
புதிய தொழில், புதிய வியாபாரம், புதிய பார்ட்னர் கிடைக்கும் அமைப்பு உள்ளது. நல்ல மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனத்தோடு இருப்பது நல்லது. குழப்பங்கள் வந்து போகும். பயணங்கள் மேற்கொள்வீர்கள். திடீர் முதலீடு, செலவுகளை செய்யும் அமைப்பு. தாயாருக்கு அபிஷேகம் கொடுப்பது, அம்பாள் கோயிலுக்கு செல்வது நன்மை. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்மைகளைத் தரும்.


Click it and Unblock the Notifications
