இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடக்கவே நடக்காது.. கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ''மேற்கத்திய நாடுகளில் ஒரு புயல் வீசியுள்ளது. இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடக்காது. ஆனாலும் அரசை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு முயற்சிகள் இந்தியாவிலும் தொடர்ந்து நடைபெறுகின்றன. வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் என்ன நடந்தது என்று பாருங்கள். பிரான்சில் நடப்பதை பாருங்கள்'' என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியினருக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வார்னிங் செய்துள்ளார்.

rss-chief-mohan-bhagwat-warns-agains-regime-change-bid

நாடு முழுவதும் இன்று தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தசரா விழாவையொட்டி பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ஸின் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்.

ஒவ்வொரு தசரா கொண்டாட்டத்தின்போதும் அவர் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுவதும் வழக்கும். அந்த வகையில் இன்று அவர் ஆற்றிய உரையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருக்கு வார்னிங் கொடுத்தார்.

இதுதொடர்பாக மோகன் பகவத் கூறியதாவது:''மேற்கத்திய நாடுகளில் ஒரு புயல் வீசியுள்ளது. வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் என்ன நடந்தது என்று பாருங்கள். பிரான்சில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பாருங்கள். இந்தியாவில் அரசாங்க மாற்றம் நடக்காது. ஆனாலும் அரசை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு முயற்சிகள் இந்தியாவிலும் தொடர்ந்து நடைபெறுகின்றன.

போராட்டங்கள் நடைபெறுவது இயல்புதான். சிக்கல்கள் வரும்போது போராட்டங்கள் உருவாவது வழக்கம் தான். ஆனால் அந்த போராட்டங்கள் வெறுப்புணர்வை விதைப்பதற்கானதாக இல்லாமல் தீர்வுகளை நோக்கியதாக இருக்க வேண்டும். பிரச்சனைக்கான தீர்வை எட்டப்படுவதே போராட்டத்தின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். அதோடு கண்ணியத்தை மதிக்க வேண்டும்.

போராட்டங்களும், போராட்ட இயக்கங்களுக்கும் வாக்குகள் அல்லது புகழை தேடும் நோக்கத்தில் இருக்க கூடாது. இதனை மனதில் வைத்து போராட்டங்களை தூண்டிவிடக்கூடாது. பிரச்சனைக்கான உண்மையான தீர்வுகள் பேச்சுவார்த்தைகளில் வரும் பரஸ்பர கருத்து மாற்றத்தால் தான் உருவாகும்.

இப்போது மக்களை பாதிக்கப்பட்டவர்களாக உணரும் சூழலை உருவாக்கி அதன்மூலம் நாட்டில் குழப்பத்தை தூண்ட பல்வேறு சக்திகள் செயல்பட்டு வருகின்றன. நாட்டில் குழப்பத்தையும், பிளவையும் ஏற்படுத்த முயற்சிக்கும் இத்தகைய செயல்களுக்கு நாம் இரையாகிவிடக்கூடாது. விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

எந்த வகையான தூண்டுதல்கள்,குழப்பத்திற்கும் நாம் ஆளாகிவிடக்கூடாது. பாரதம் 'விஸ்வகுரு' (உலக வழிகாட்டி) நிலையை அடைய வேண்டும் என்ற நமது இலக்கையும், கனவையும் மனதில் கொண்டு தொடர்ந்து செயல்பட வேண்டும். நாட்டு பற்று, நம் முன்னோர்கள் பற்றிய பெருமை மற்றும் நம்முடைய கலாசாரத்தின் பெருமை ஆகிய 3 விஷயங்களையும் முழு மனதுடன் ஏற்று நம் நாட்டின் முன்னேற்ற பாதையில் நாம் ஒன்றாக பயணிக்க வேண்டும்'' என்று பேசினார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை மாற்ற வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் காங்கிரஸ் உள்பட 'இந்தியா' கூட்டணி கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது அரசை மாற்றுவது தான் நோக்கம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறி உள்ள நிலையில் அவர்களின் பெயரை குறிப்பிடாமல் நாட்டில் ஆட்சி மாற்றம் நடக்காது என்று மோகன் பகவத் இந்த வார்னிங் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+