தினகரனை கட்சியிலிருந்து விலக வலியுறுத்திய அதிமுக எம்பிக்கு கொலை மிரட்டல்!
அதிமுக எம்பி கோ.அரிக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
திருத்தணி: அதிமுக எம்பி கோ.அரிக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரி திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்பி கோ.அரி
அதிமுகவை விட்டு டிடிவி தினகரன் விலக வேண்டும் என வலியுறுத்தினார். சசிகலாவையும், தினகரனையும் ஒதுக்கிவைப்பதில் அதிமுகவில் ஒருமித்த கருத்து நிலவுகிறது என்றும் எம்பி கோ.அரி கூறினார்.

அவரது இந்தப் பேச்சுக்கு தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் எம்பி கோ.அரிக்கு மர்மநபர்கள் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அரி போலீஸில் புகார் அளித்துள்ளார். தனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். ஆளும் கட்சியை சேர்ந்த எம்பி ஒருவருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications