பிரிந்து கிடக்கும் அதிமுக எம்.பிக்கள்... வில்லத்தனமாக யோசிக்கும் பாஜக!
பிரிந்து கிடக்கும் அதிமுக எம்.பிக்களை வைத்து விளையாட்டு காட்ட பாஜக வில்லத்தனமாக யோசிப்பதாக கூறப்படுகிறது.
சென்னை: அதிமுக பிரிந்து கிடக்கும் நிலையில் அதன் 50 எம்.பிக்களை வைத்து பாஜக வில்லத்தனமான ஒரு விளையாட்டு விளையாட யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சந்திக்கச் சென்றார். தமிழகத்துக்கு வறட்சி நிவாரண உதவி பெறவும் 'நீட்' தேர்வுக்கு தடை பெறவும் சென்றார் என்பதுதான் அவரது பயணத்துக்கு சொல்லப்படட் காரணங்கள்.
பிரதமர் மோடியைச் சந்திக்கச் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடியின் பயணம் எந்த பயனையும் பெற்றுத் தரவில்லை என்றும் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

ஒருநாள் முன்னதாக சென்றது ஏன்?
வழக்கமாக பிரதமரை சந்திக்க சில விதிமுறைகள் இருக்கின்றன. அதேபோல் முதல்வரின் டெல்லி பயணத்துக்கும் விதிமுறைகள் இருக்கின்றன. பிரதமரை சந்திக்க டெல்லி செல்லும், எந்த முதல்வரும் சரியாக 4 மணிநேரத்துக்கு முன்பாக டெல்லி சென்று சேர்வது வழக்கம்.

அதிகாரிகள் லேட்
ஆனால், டெல்லியில் முதல்வர் எடப்பாடியாருக்கு எந்த நிகழ்ச்சிகளும் இல்லாத நிலையில் பிப்ரவரி 27ஆம் தேதி சந்திப்புக்கு 26ஆம் தேதியே சென்று விட்டார். ஆனால், முதல்வரின் செயலாளர்கள் சிவ்தாஸ் மீனா மற்ரும் விஜயகுமார் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் 27ஆம் தேதி காலையில் தான் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

19 எம்.பிக்கள் மட்டுமே வருகை
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், உடுமலை ராதாகிருஷ்ணன், வேலுமணி ஆகியோர் உடன் சென்றிருந்தனர். முதல்வரை வரவேற்க, டெல்லியில் சசிகலா அணி எம்.பிக்கள் 19 பேர் மட்டுமே முதல்வரை விமான நிலையத்தில் சந்தித்து வரவேற்றிருக்கின்றனர். இது சசிகலா அணியினரின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்துள்ளது.

அடடா மத்தவங்க என்ன ஆனாங்க
காரணம், அதிமுகவில் மொத்தம் மக்களவை மற்றும் மாநிலங்களை எம்.பிக்களின் எண்ணிக்கை 50. அதில் 12 பேர் தற்போது ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருக்கின்றனர். முதல்வரை சந்திக்க தம்பிதுரையுடன் சேர்ந்து 19 பேர் மட்டுமே சென்றுள்ளனர். மீதி 19 பேர் யார் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தம்பிதுரை பதவி பறிபோகுமா?
அதிமுக எம்.பிக்கள் தற்போது மூன்று அணிகளாக பிரிந்து நிற்பது முதல்வரின் பயணத்தில் கண்கூடாக தெரிந்துவிட்டது. இந்த பிரிவை பாஜக அரசு பயன்படுத்திக்கொள்ள திட்டமிடுவதாகத் தெரிகிறது. வெறும் 19 எம்.பிக்களின் ஆதரவை மட்டும் வைத்திருக்கும் அதிமுக (சசி அணி), மக்களவை துணை சபாநாயகர் என்ற பதவியை தம்பிதுரைக்குக் கொடுத்திருக்கிறது.

அலறும் சசி அணி
இப்போது போதிய பலமில்லாத காரணத்தால், அந்த பதவியை அவரிடமிருந்து பறிப்பது குறித்து பாஜக யோசித்து வருவதாகத் தெரிகிறது. அவ்வாறு நிகழ்ந்த்தால், அது சசி அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பது உறுதி.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications