இலங்கையின் அநாகரீக செய்தியைக் கண்டித்து ராஜபக்சே கொடும்பாவியை எரித்த அதிமுகவினர்
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை: இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை இணையதளத்தில் முதல்வர் ஜெயலிலதா அநாகரீகமான முறையில் சித்தரித்து கட்டுரை வெளியிட்ட இலங்கை அரசின் செயலைக் கண்டித்து இன்று அதிமுகவினர் ஆங்காங்கு போராட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகில், முன்னாள் நகர செயலாளர் செந்தமிழன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தினர். பின்னர், இலங்கை அதிபர் ராஜபக்சேயின் உருவ பொம்மையை அவர்கள் எரித்தனர்.
இதேபோல சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தச் சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். இக்கட்சியின் சார்பில் பொள்ளாச்சியில் ராஜபக்சே கொடும்பாவி எரிக்கப்பட்டது.
சென்னை கோயம்பேட்டிலும் வணிகர் சங்கம் சார்பில் ராஜபக்சே கொடும்பாவி எரிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications