உள்ளாட்சித் தேர்தல் : நகராட்சி, பேரூராட்சி அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் நகரமன்ற வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பில் அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 31 மாவட்ட பஞ்சாயத்துகள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 528 பேரூராட்சிகள், 12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த அமைப்புகளில் பதவியில் இருப்பவர்களின் 5 ஆண்டுகள் பதவிக்காலம், வருகிற அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல்கள் வருகிற அக்டோபர் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து, வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
தேர்தல் தேதியை, தேர்தல் ஆணையம் அறிவித்த மறுநாளே அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியானது. அதில், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 12 மாநகராட்சியில் உள்ள வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், 31 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்க்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். நகர்மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் 3,613 பேர் கொண்ட பட்டியலை முதல்வர் ஜெயலலிதா சார்பில் அதிமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது. பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் 8,288 பேர் கொண்ட பட்டியலையும் அதிமுக வெளியிட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications